Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நரை (வெள்ளை) முடி வருவதற்கான காரணங்கள்

வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண் ணம் அனைவரது மனதிலும் இருக் கிறது. ஆனால் உண்மையில் முடி யின் வேர் பகுதியில் உள்ள மெல னின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய் ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. மேலும் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங் கள் இருக்கின்றன. இத்தகைய காரணங்கள் தெரியாததால், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்துகொ ண்டு, வெள்ளை முடியை தடுக்கலாம்.

மரபணு பண்புகள்

பெற்றோரின் மரபணுக்கள் மூலமா கவும் வெள்ளை முடிகள் வருகின்ற ன. அதாவது பெற்றோருக்கு வெள் ளை முடிசிறுவயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந் தால், அந்த வெள்ளை முடியை தடு க்க முடியாது.

வைட்டமின்கள் குறைபாடு

உடலில் வைட்டமின்கள் குறை வாக இருந்தாலும், முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இரு ந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத்தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவு களை அதிகம் உண்ணச் சொல்கி ன்றனர். வைட்டமின் குறைபாட்டி னால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

தைராய்டு

வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு கார ணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல், அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறை வாக சுரந்தாலும், வெள்ளை முடி வந்துவிடும்.

மன அழுத்தம்

பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்று ம் கிரேமுடிகள், அதிக மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்ல து பரபரப்பான வாழ்க்கை முறையின் கார ணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகி ன்றன. இதனை அனைத்து அழகியல் நிபுண ர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கிய மான, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தா ல், வெள்ளை முடி வருவதைத் தடுக்கலாம்.

புகை பிடித்தல்

வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின்மீது மேற் கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இரு ப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியைவிட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண் டறியப்பட்டுள்ளது. ஆகவே சிகரெட் பிடிக்கா மல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப் போடலாம் என் றும் கூறுகின்றனர்.

{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: