Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெருந்தலைவர் காமராஜர்

முதலமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருது நக ரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பிவந்தார். காமரா ஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுக ருமான முருக.தனுஷ்கோடி, விருது நகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.

தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மா ள் பேசிக்கொண்டிருந்தபோது, “அய் யா (காமராஜர்) மந்திரியாக இருப்ப தால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர்கூட வாங்கிக்கொ டுக்காமல் இருந்தால் நன்றாக இரு க்குமா? ஆகையால் அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாயாவது கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது” என்றார்.
 
சென்னை திரும்பியதும், இதுபற்றி காமராஜரிடம் தனுஷ் கோடி சொ ன்னார்.  “யார் யாரோ பார்க்க வருவார்கள் என்பது உண்மை தான். வருகிறவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா ? அவர் களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது கொடு த்து வரும் 120 ரூபாயே போது ம்” என்று கூறி த‌னது தாயாரு க்கு கூடுதலாக பணம் கொடு க்க‍  மறுத்துவிட்டார் காமராஜ ர்.
 
காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகன் ஜவகருக்கு திருமண ஏற் பாடு நடந்தபோது, சிவகாமி அம்மாளை தனுஷ்கோடி சந்தித்தார். வீட்டில் பாத்ரூம் (கழிப்பிடம்) கட்டவேண்டும் என்றும், வீட்டை ஒட்டிய இடம் விலைக்கு வருவ தாகவும், அதற்கு ரூ.3 ஆயிரம் செலவாகும் என்று ம், இதை காமராஜரிடம் தெரிவிக்குமாறும் சிவ காமி அம்மாள் கூறினார்.
 
இதன் பிறகு நடந்தது பற்றி, தனுஷ்கோடி கூறுகி றார்:
 
“ஒரு முதலமைச்சர் வீட்டில் இந்த வசதிக்கூட இல்லா விட்டால் எப்படி?” என்று எண்ணிக்கொ ண்டு, சென்னை வந்ததும், தாயார் சொன்னதை தலைவரிடம் (காமராஜர்) கூறினேன். உடனே தலைவர், “நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்.
 
ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கி விட்டதா க சொல்லுவான். சிலர் பத்திரிகையில்கூட எழுது வார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ!” என்று என்னை விரட்டி விட்டார். சந்தர்ப்பம் சரியில்லை என்று நான் உடனே திரும்பி விட்டேன்.
 
மறுநாள் போனேன். “ஊரான் சொல்வான் என்பதற்காக வயதான தாயார் கஷ்டப்பட வேண்டுமா? உங்கள் பெயரால் வாங்க வேண்டும்
காமராஜரின் தாயார் இறந்தபோது எடுத்த‍ படம்

என்பதற்காகவே, உங்களிடம் கேட்க வந்தேன். நீங்கள் இப் போது ரூபாய் ஒன்றும் கொடு க்க வேண்டாம்.

 
இப்போது எனக்கு வேண்டியது உங்கள் அனுமதி மட்டுமே” என் று உறுதியுடனும் பணிவு டனும் கூறினேன். “சரி, எப்படி யோ செய் போ” என்று மனம் மாறி அனுமதி தந்தார் எனக்கு வேண்டிய அனும தி கிடைத்துவிட்டது. தாயாரின் ஆசைப் படி அந்த இடமும் வாங்கப் பட்டது.”
 

வ்வாறு முருக.தனுஷ் கோடி கூறியுள்ளார்.
 
காமராஜர், சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். முத ல் அமைச்சர் பதவி ஏற்ற பிறகும் கூட, அரசு பங்களாவுக்கு குடிபோகாமல் அதே வாடகை வீட்டில்தான் வசித்தா ர். வீட்டின் எண் 8. பொதுவாக, எட்டாம் எண்ணை அதிர்ஷ்ட மற்ற எண்ணாக நினைப்பார்கள்.
 
ஆனால் காமராஜர் அது பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. காமராஜர் எந்தப் பண்டிகையையும் கொண்டாடு வது இல்லை. தீபாவளியின்போதுகூட, புது வேட்டி, புது சட்டை அணிய மாட்டா ர். ஆனால் அவருடைய உதவியாளராக இருந்த வைரவனுக்கு தீபா வளிக்கு புது துணிமணிகள் வழங்குவார்.
 
பொதுவாக காலை6 மணிக்கு எழுவார். காலையில் எங்காவது அவ சரமாகப் போகவேண்டியி ருந்தால், முன்னதாகவே எழுப்பி விடும்படி வைரவ னிடம் கூறுவார். காலையி ல் காபி சாப்பிட்டதும், பத்தி ரிகைகளைப் படிப்பார். பிற கு, தன்னைப் பார்க்க வந்த வர்களுக்கு பேட்டி அளிப் பார்.
 
வந்தவர்களின் கோரிக்கைக்கு தக்கவாறு பதில் அளிப்பார். தனக்கு த் தெரிந்தவர்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கொ  ண்டு வந்தால், “முடியாது, போ” என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். மற்றவர்கள் இத்தகைய கோரிக் கைகளைத் தெரிவித்தால், அவர்க ள் மனதைப் புண்படுத்தாமல், “ஆக ட்டும் பார்க்கலாம்” என்பார்.
 
அவசியமான உதவியைச் செய்யும்போது, அவர்களின் சாதி, மதம், தெரிந்தவன், தெரியாதவன், கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரர் என்றெ ல்லாம் பார்ப்பதே இல்லை. நியாயமும், தகுதி யும் இருந்தால் நிச்சய மாக உதவுவார். காலை யில் முகச்சவரம் செய்து கொண்டு குளிப்பார்.
 
இரவில் எவ்வளவு நேரமானாலும் குளித்துவி ட்டுத்தான் சாப்பிடு வார். இரவில் தூங்குவதற்கு முன் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பது வழக்கம். சில நாட்களில் இரவு 2 மணி வரை கூட படித்துக்கொண்டு இருப்பார்.
 
சிக்கலான அரசியல் பிரச்சினைகள் பற்றி முக் கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசிக்கும் சமயங்களில், காலை 5 மணி வரைகூட பேசிக்கொண்டு இருப்பார். அதன்பின், ஒரு மணி நேரம்தான் தூக்கம்! பிறகுவழக்க ம்போல் எழுந்து, தன் அலுவல்க ளை கவனிப்பார்.
 
மதியச்சாப்பாடு, சைவம்தான். என் றாவது ஒருநாள் முட்டை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அதுதா ன் விசேஷ சாப்பாடு. மாலையில்  ஒரு கப் காபி. இரவில் இட்லியும், பாலும்தான் அவர் உணவு. இடை யில் காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது இல்லை. பகல் சாப் பாட்டை முடித்தவுடன் தூங்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.
{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

  • SALUTE TO THIS GREAT SOUL .I SAW HIM FROM NEAR BY AT THANJAVUR WHEN I WAS AT SCHOOL.TAMIL NADU AND INDIA NEED MORE KAMARAJS TO SAVE THE COUNTRY FROM CORRUPTION AND INEFFICIENCY.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: