நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலை க்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப் படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக் குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக் குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற் றது.
தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜி பாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.