Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியாவில் பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம் – சீனப் பத்திரிக்கை

இந்தியாவில் தங்கத்தைக்கொண்டாடி வருகிறார்கள். அங்கு தங்கத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் பெண்கள் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தியைக் குத்தியிரு ப்பார்கள் என்று எழுதியுள்ளது சீனப் பத்திரிக்கை ஒன்று.

இந்தியர்களின் தங்க மோகம் குறித்துசீனாவைச் சேர்ந்த பீப்பி ள்ஸ் டெய்லி அரசாங்க நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் தங்கத்தை எப்படியெல் லாம் இந்தியர்கள் கொண்டாடுகின் றனர் என்று கூறியுள்ளனர்.

அந்த செய்தி…

இந்தியப் பெண்கள் தங்க நகை இல்லாமல் வெளியில் செல்வதில்  லை. தங்கத்தோடு போடாமல் எ ப் பெண்ணையும் பார்க்க முடியா து. தங்க மூக்குத்தியாவது அணி ந்துதான் அவர்களைப்பார்க்க முடியும். சாலைகளில் பிச்சை எடுக்கும் பெண்கள்கூட சின்னதா க ஒரு தங்க மூக்குத்தி அணிந்தி ருப்பதைப் பார்க்கலாம். இந்தியர் களின் கருமையான நிறம் தங்க த்தை எடுப்பாக்கிக் காட்டுவது அவர்களின் தங்க மோகத்திற்கு க் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசு பேப்பர் கோல்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூ லம் இந்தியர்களின் தங்க மோக த்தை உணர்ந்து கொள்ளலாம்.

இந்தியாவில் பெண்கள் நகை அணியாமல் வெளியே போவது சரியல்ல என்ற கருத்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங் க நகைகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் அணிகிறார் கள். இந்தியப்பெண்களைப் பொ றுத்தவரை தங்கத்தோடு, தங்க மூக்குத்தி, நெக்லஸ், மோதிரம் போன்றவற்றை அதிகம் அணிகி றார்கள். இவை இல்லாமல் எந்தப்பெண்ணையும் பார்க்க முடியாது.

பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க் கலாம்.

இந்தியாவில் ஆண்களும் கூட பெரிய அளவில் நகைகளை அணிகிறார்கள். மோதிரம், கழுத்தில் செயின் போன்றவை ஆண்கள் பொதுவாக அணியு ம் தங்க நகைகள் ஆகும்.

இந்தியாவில் மகள்களுக்கு தங்க நகைகளை சேர்த்து வைப்பதில் தாய்மார்கள் கவனம் காட்டு கிறார்கள். இதை அவர்கள் பெண்ணுக்குச் சேர்த்து வைக்கும் சீதன மாக, வரதட்சணையாக பார்க்கிறார்கள். மகள்களை அழகுபடுத்திப் பார்ப்பது மட்டுமல்லாமல், பெண் ணுக்குத் தாங்கள் கொடுக்கும் சொத்தாகவும் பார்க்கிறார்கள்.

இப்படி இந்தியர்களிடையே ந கை மோகம் அதிகம் இருப்பதால் தான் நகைக் கடைகளும் அதிக ம் உள்ளன. சிறிய நகராக இருந் தாலும் சரி , பெரிய நகராக இருந் தாலும் நகைக்கடைகள் இல்லா த ஊரே கிடையாது. நகைள் அதிகம் விற்பனை ஆவதால்தான் இந்தியாவில் உள்ள நகைக் கடை கள் பிரமாண்டமாகவும், விளக்கொளியில் ஜொலித்த படியும் காட்சி தருகின்றன என்று அந்த செய்தி கூறுகிறது.

{*{*{ இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் }*}*}
*-*-*
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: