Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள ‘பகீர்’ தகவல்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்’ என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது.

இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து.

படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்குபின் மறைந்துள்ள “பகீர்’ தகவல் கள் வருமாறு:

மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களி ல் மாடுகள் அறுக்கும்போது, சிறியளவில் உள்ள எலும்புகள் இறைச் சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியா த எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கி ன்றனர்.

அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடி யாக கொள்முதல் செய்கி ன்றனர். ஒரு கிலோ எலு ம்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காயவைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத் திற்கு 100 டன் வரை  எலும்புகள் கிடைக்கி றது

beef bone powder

மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின் றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற் றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட்டைகளில் அடைக்கி ன்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூ பாய் வரை  விற்கின்றனர்.

அதை தமிழகம், கேரளா, ஆந்திராவி ல் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச்செல்கின் றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்ப டுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட் டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டி ற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட் ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக் கள் 50முதல் 60சதவீத அளவிற்கும்அதிக மாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழ ந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் வி ரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக் லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.

பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டு மின் றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் “சிரப்’களிலும் சேர்க்கப் பட்டு வருகிறது. போட்டோ ஜெல ட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ் ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பய ன்படுத் தப்படுகிறது.

எலும்பு பவுடர் உரம்: வெளிநாடு களில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத் தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதா ல், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுக ளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.

மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிக ளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற் போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவ து அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறை ச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகிய வற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெ ளிப்படையாக தெரிந்தால் , விற்பனை பாதிக்கும் என்பதால், அவற் றை தயாரிப்பாளர்கள் மறை க்கின்றனர்.

நன்றி – நல்ல‍ நண்பன் (முகநூல்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: