Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது;

‘காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்த லின் ஆதார ரகசியங்கள்’ என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான் ஸும் இல்லை என்றால், மனித வர லாறே ரத்தக் களறியாகத்தான் இரு ந்திருக்கும்.

சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா… ஒன்றானது இல்லையா ?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலு க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியா னது; கொஞ்சம் ‘பிளேபாய்’ தன மானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுனமொழியில்கூட காதல் செய்துவிடலாம்.

‘ப்ளடானிக் லவ்’ (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படியல் ல. அதற்கு இனிமையான உரை யாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கி யம், எதிர்பாராத சர்ப் ரைஸ்க ளைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப் படும்.

‘முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சி னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிர ச்சினைகளைத் தீர்த்துக் கொ ள்ளலாம் சந்தோசமாக வாழு ம் கணவன் – மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவ ன் பாராட்ட வேண்டும்.

கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும். மனி தர்களில் மூன்று வகைப்பட்டர்கள் இருக்கிறார்கள்.

1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, ‘நானும் சரியா க இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, ‘நான் சரி யாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக் கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், ‘நான் சரி யாகத்தான் இருக்கிறேன். நீ சரியில் லை’ என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்… முதல் வகைதான். ‘நானும் சரி, நீயும் சரி. பேசித்தீர்ப்போம் வா’ என்று நினை க்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க் கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ் சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

நன்றி – இளமை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: