Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெலிந்த உடல் குண்டாக வேண்டுமா?

 

க்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைகுறைக் க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்னதான் உணவுகளை உண்டு உடல் எடை யை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிக ரிக்க தேவையற்ற ஆரோக்கியமில் லாத உணவுகளை எல்லாம் உண் டால், எடைகூடாது. எடையை அதி கரிக்க அதிக அளவு கலோரி நிறை ந்த உணவுகளை உட்கொள்ள வே ண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார் போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின் பற்றிப் பாருங்களேன்…

புரோட்டீன்

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொரு ட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிக ம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதி லும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

கார்போஹைட்ரேட்

ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போ ன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதி கம் உள்ளது. மேலும் பழங்களில் மாம் பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார் ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றை யும் தினமு ம் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலு ம் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப் படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

கொழுப்புகள்

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண் ணெய், முந்திரி பருப்பு, வேர் கட லை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதி கம் நிறைந்துள்ளது. ஆகவே இத ற்கான டயட் இருக்கும்போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டு ம். இவை அனைத்துமே ஆரோக் கிய மான கொழுப்புகள் தான்.

மேலும் உடல் எடையை அதிகரி க்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரு ம் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழ ங்களை சாப்பிடுவதும், உடல் எடை யை அதிகரிக்கச் செய்யும் உணவுக ள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக் லேட்டில்கூட அதிக கலோரிகள் நி றைந்துள்ளன.

ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்ப தோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உட ல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம்கூட நஞ்சாக மாறி விடும்.

{*{*{ இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் }*}*}
*-*-*
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: