கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைக ளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம்மூலம் பலர் நண்பர்க ளை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளா க மாறியதும் உண் டு.
தாய், தந்தையர் தங்கள்பிள்ளை களின் நலனுக்காக கோபிக்கி றார்கள். அதை அக்குழந்தைக ள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமை கிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அ ங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறி போய் விடுகிறது.
அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீதுகோபம் கொள்கிறான். அது பொய் கோபமா க, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறி விடுகிறது. அதே கோபம் உண்மையான கோ பமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய் விடு கிறது. சில சமயம் அக் கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வா ழுதல் அல்லது பெரும் விவாகரத்துவரை அழைத்துச் செல்கிறது.
கோபம் மனிதன் தவிர்க்கவேண்டிய செயல் என்பதனை தமிழ்ச் சொற்பொழிவாளர் திரு. சுகிசிவம் அவர்கள் சன் தொலைக்காட்சியி ல் “இந்தநாள் இனியநாள்” நிகழ்ச்சியில் ஆற் றிய உரை இது.
சிலர் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உப்புச் சப்பு இல்லாத விஷ யங்களுக்காக குடும்ப உறவைத் துண்டித்து வாழ்கிறார்கள்.