Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌ஹதி என்ற ராகத்தில் அமைந்த ஒரே ஒரு அரிய திரைப்பாடல் – வீடியோ

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய “மஹதி” ராகப்பாடலான” மஹனீய மது ர மூர்த்தே ” என்ற பாடல் இவரின் கர்னாடக கச்சேரியில் மிகப் பிரப லமானது. அபூர்வமான இந்த ராகத்தில் அமைந்த ஒரே ஒரு திரைப் பாடல் ‘அபூர்வ ராகங்கள்’ தமிழ்த் திரை ப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன் னர் எம். எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின் றார். விஸ்வநாதன் தற்செயலாக பால முரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கி ன்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் உருவா னதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான “அதிசய ராகம்; ஆனந்த ராக ம்; அழகிய ராகம்” என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவ ங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறி விடுகின்றது (ராக மாலிகை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் ஒரு பாடலில் பல ராகங்களும் தொ டர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலி கை ) இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்.

கொசுறுச் செய்தி:
மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணை யின் பெயராகும். ஆனால், ‘எப்படத்திலும் நாரதர் வீணையின வைத் துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவை தானே வைத்துக்கொண்டு வருவார்’, என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. 
முதன்முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணை யை வைத்துக்கொண்டு வருவதாகத்தான் காட்சிக ள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொ ண்டு படும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்ட ர், வீணைக்குப் பதி லாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்ப துபோலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்கு ப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நார தர் ஏன் என்று கேள் வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூ க்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, “நாராயண; நாரா யண” என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

– gopal krishnan (fb)

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: