சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று பெரும் பரபர ப்பைச் சந்தித்தது. காதல் மணம் புரிந்த மகளை, அவரது கழுத்திலிரு ந்த தாலியைப் பறித்து அறுத்துவீசி எறிந்து விட் டு அவரை பெற்றோர் வலு க்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்ற னர்.
சேலம் அருகே ஜி.கே.கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 28 வயதான இவர் விசைத்தறித் தொழிலாளி ஆழார். இவர் தனது காதலியான கலாவதியை பவானியில் வைத்து மணம் புரிந்தார். இதையடுத்து திருமணத்தைப் பதிவு செய்யவும், போலீஸ் பாதுகாப்பு கோரவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்ிதற்கு வந்தார்.
அந்த சமயத்தில் கலாவதியின் பெற்றோர், உறவினர்கள் என 50க்கு ம் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். கலாவதியைப் பார்த்த அவ ர்கள் அவரை நோக்கிப் பாய்ந்து சென்றனர்.தங்களுடன் வருமாறு கூறினர். ஆனால் கலாவதி மறுத்தார். ஆனாலும் சற்றும் மனம் தள ராத அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலாவதியைப் பிடித்து இழுத்தனர். அவர் கழுத்தில் செந்தில்குமார் கட்டியிருந்த தாலியைப் பறித்து அறுத்து வீசி எறிந்து விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபர ப்பு ஏற்பட்டது.
தாலியைப் பறித்து பெற்றோர் அறுத்து வீசி எறிந்ததால் துடித்துப்போ ன கலாவதி கதறிக் கதறி அழுதார். ஆனால் அந்த அழுகை குடும்பத் தினர் காதில் விழவில்லை. மாறாக கலாவதியை தரதரவென இழுத் துச் சென்றனர். பின்னர் ஒரு ஸ்கூட்டரில் கலாவதியை ஏற்றி முன் னும், பின்னும் ஒருவர் உட்கார வண்டியைக் கிளப்பிக்கொண்டு பற ந்து போய் விட்டனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த செந்தில்குமாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் கண் முன்பாகவே காதல் மணம் புரிந்த மனை வியை கொடூரமாக இழுத்துச் செல்வதைப் பார்த்து அவர் கண் கலங் கிப் போய் நின்றார்.
பின்னர் அவரிடம் போலீஸார் என்ன ஏது என்று விசாரித்தனர். அப் போது அவர் கூறுகையில், 4 ஆண்டுகளாக சீலநாயக்கன்பட்டி 7வது கிராஸ் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறேன்.
அப்போது, சுந்தரத்தின் மகள் கலாவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற் பட்டு, காதலாக மாறியது. எங்களது காதலுக்கு கலாவதியின் பெற் றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி நண்பர்கள் உத வியுடன் பவானியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் இருவரும் திருமணத்தை பதிவுசெய்ய வும், பாதுகாப்பு கேட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந் தோம்.
நாங்கள் வருவதை அறிந்த கலாவதியின் பெற்றோர் மற்றும் அவர்க ளது உறவினர்கள் கும்பலாக வந்து, கலாவதியை என்னிடம் இருந்து பிரித்து இழுத்துச் சென்று விட்டனர். எனவே எனது மனைவியை என் னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க. இது குறி த்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
news in magazine