‘கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக் கும்போதுதான் எனக்கு சமூக அடிப் படையிலான ஸ்காலர்ஷிப் உண்டு என்பது தெரியவர, அதற்காக விண் ணப்பித்துக் காத்துள்ளேன். விட்டுப் போன முந்தைய இரண்டு வருடங்க ளுக்கான ஸ்காலர்ஷிப்பையும் தற் போது பெற வழியுள்ளதா? கல்வி உத வித்தொகைகள் பற்றிய விவரங்களு ம் தேவை…”
– என்.சுஷ்மிலா, மதுரை
ஷெரீன், இயக்குநர், வெளிச்சம் கல்வி இயக்கம், சென்னை:

”கல்லூரியில் படிக்கும்போது என்றில்லை… படிப்பு முடிந்த பிறகும்கூட குறிப்பிட்டகாலக் கெடுவில் விண்ணப்பித்தால்… ஸ்காலர்ஷிப்பு களை கேட்டுப்பெற முடியும். இதற்கு உங்களு டைய தகுதி, குறிப்பிட்ட கல்லூரியின் மாணவி என்பதற்கான சான்று, முந்தைய ஆண்டுகளில் குறைந்தது 75% வருகைப்பதிவு ஆகியவை இ ருந்தால் போதும்.
பிற்பட்டோர் நலம், ஆதிதிராவிடர் நலம், சிறுபா ன்மையினர் நலம் என பல்வேறு கல்வி உதவி த்தொகைகளை உங்களுக்கு வழங்குவது அரசாங்கம்தான். இடை யில் நின்று முறையாக பெற்றுத்தருவது மட்டுமே கல்லூரிகளின் பணி. மாணவர்கள் தங்களுக்கான ஸ்காலர்ஷி ப்புகளை அழுத்தமா கக்கோரிப் பெறுவது அவர்களின் உரிமை. இதி
ல் கல்லூரிகள் தவறி னாலோ, தாமதம் இ ழைத்தாலோ உரிய அர சுத்துறையில் முறையீ டு செய்யலாம்.
சமூகம் சார்ந்து மத்திய, மாநில அரசுகள் வழங் கும் வழக்கமான ஸ்கா லர்ஷிப்புகள் தவிர்த்து, முதல் தலைமுறையினருக்கான கல்வி உதவித்தொகை, பெண்களு க்கான சிறப்பு உதவித்தொகை, சிறு பான்மையினருக்கானது என ஏராளமான கல்வி உதவித்தொகைக
ள் நடப்பில் இருக்கின்றன. அந் தந்த மாவட்ட கலெக் டர் அலுவ லகத்தில் விவரங்களைப் பெற லாம்.
தவிர. எல்ஐசி, ஹெச். சி.எல்., அசோக் லேல ண்ட், டாடா ஃபவுண் டேஷன், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் என ஏராளமான தனி யார் வழங்கும் ஸ்கா லர்ஷிப்புகளும் உள்ள ன. இந்நிறுவ னங்கள் அவ்வப்போது தினசரி மற்றும் தங்கள் இ ணையதளங்களில் அதற்கான விண்ணப்பத் தைவெளியிட்டு சில பரி சீலனை களுக்குப் பிறகு ஸ்காலர்ஷிப்பு களை வழங்குகின்றன.
மாணவர் உயர்கல்விக்கான வெளிச்சம் அமைப்பின் வலைப்பூ பக்க த்தில் (velichamstudents.blogspot.in) இந்த ஸ்காலர்ஷிப் தகவல்க ளின் தொகுப்பு கிடைக்கிறது. ஹாட்லைன் (9698151515) எண்ணில் தொடர்பு கொண்டும் உரிய சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ள லாம்.”