Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழர்கள் நாம், நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? – – வீடியோ

பூம்புகார்-காவேரிப்பூம்பட்டினம்.பண்டைக்காலசோழர்களின் தலை நகரம். இந்நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும் போது கடலால் அழிந்துபோன நகர ம் என்று மட்டும் சொல்லி முடித்து விடுவார்கள். இந் நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிக ளுக்கெல்லாம் முன் னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண் டுகளுக்கு முன்பிருந்தே இரு ந்தே இந் நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாக வும், உலக வர்த்தகத்திற்க் கான சந்தையாகவும் இருந் திருக்கிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேக லை உள்ளிட்ட நூல்களில் இந் நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல் கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.

இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந் நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்தி விட்டது. திட்ட மிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரிய வில்லை . 🙂

பூம்புகார் நகரத்தையும், குஜரா த்தின் கடற்கரையில் (மும்பை க்கு மேற்கே)இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறை யில் ஆய்வுசெய்த இங்கிலாந்து க்காரர் கிரகாம் ஹன்காக் (Gra ham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded King doms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகர ம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கரு விகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்தி ரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப் படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லா ம் வெளியானது 2002ல். இன்றுவரை அது பற்றி யெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. 

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?
இந்த வீடியோவில் 32-வது நிமிடத்திலிருந்து பூம்புகார் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆய்வுகள்

நிலாப்பெண்ணுக்கு யாரோ சொன்ன‍தை – நான்
உலாப்போகும்போது அவள் எனக்கு சொன்ன‍து

Leave a Reply