இன்றைய காலக்கட்டத்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் தனது குடும்ப உறவுகளின் பெயர்களோ அல்லது தமது மாமனார் வீட்டுறவுக ளின் பெயர்களோ தெரிவதில்லை. இதெல்லாம் கூட்டுக்குடும்பங்களில் பிள்ளைகளோ அல்லது தம்பதிக ளோ வாழ்ந்திருக்கும் பட்சத்தில், “இவர் உனக்கு இந்த முறை, நீ இவ ரை இப்படித்தான் அழைக்க வேண்டு ம்” என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இக் காலத்தில் எல்லாம் கூட்டுக்குடும்ப ங்கள் சிதைந்து தனிக்குடித்தனங்க ள் நகரங்களில் மட்டுமின்றி பல கிராமங்களில் கூட பெருகி வருகிற து. இது வேதனைக்குரியதே!
இதுபோன்ற சூழலில் வாழும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி அவரவரது உறவுகளை தெரிந்து கொள்ளவே! விதை2விருட்சம் இணையம் மூலமாக இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
ஓர் ஆண் சுமக்கும் உறவுகள் (திருமணத்திற்கு முன்பு)
ஆண் குழந்தை
மகன்
அண்ணன்
தம்பி
அப்பா
பெரியப்பா
சித்தப்பா
பெரிய மாமா
சின்ன மாமா
தாய்மாமா
மச்சான் (இந்த ஆணின் சகோதரி மகன்)
ஓர் ஆண் சுமக்கும் புதியதாய் மலரும் உறவுகள் (திருமணத்திற்கு பின்பு)
கணவன்
மாப்பிள்ளை (மருமகன்)
மச்சினன் ( மனைவியின் தம்பி)
மாமன் (மனைவியின் அண்ணன்)
மூத்தார் (கணவனின் தம்பி மனைவிக்கு)
சகலை (மனைவியின் சகோதரியின் கணவ ருக்கு)
ஓர் ஆண் சுமக்கும் புதியதாய் மலரும் உறவுக ள் (தனது மகளையோ அல்லது மகனையோ திருமணம் முடித்த பின்)
மாமனார்,
பெரிய மாமனார்
சின்ன மாமனார்
ஓர் ஆண் சுமக்கும் புதியதாய் பூக்கும் உன்னத உறவுகள் (தனது மகளுக்கோ அல்லது மகனு க்கோ திருமணம் முடிந்து குழந்தைபேறு பெற் ற பின்)
தாத்தா
பெரிய தாத்தா
சின்ன தாத்தா
ஓர் ஆண் சுமக்கும் புதியதாய் பூக்கும் உன்னத உறவுகள் (தனது மகள்(ன்) வழி – பெயரன் அல்லது பெயர்த்திக்கு )
கொள்ளு தாத்தா
ஓர் ஆண் சுமக்கும் புதியதாய் பூக்கும் உன் னத உறவுகள் (தனது பெயரனின், பெயர்த் தியின் குழந்தைக்கு )
எள்ளு தாத்தா
போன்ற உன்னதமான உறவுகள் உண்டு.
****
இதே போன்று பெண்ணும் பல வித உன்னத உறவுகளை சுமந்து வாழ்கிறாள்.
ஓர் பெண் சுமக்கும் உறவுகள் (திருமணத்திற்கு முன்பு)
பெண் குழந்தை
மகள்
அக்கா
தங்கை
அம்மா
பெரியம்மா
சின்னம்மா (சித்தி, தொத்தா)
அத்தை
முறைப்பெண் (அந்த பெண்ணின் சகோதரன் மகனுக்கு)
ஓர் பெண் சுமக்கும் புதியதாய் மலரும் உறவுகள் (திருமணத்திற்கு பின்பு)
மனைவி
மருமகள்
மச்சின்சி மைத்துனி (தனது மனைவியின் தங்கை அக்கணவனுக்கு)
மாமி
அத்தை
நாத்தனார் (கணவனின் சகோதரி)
ஓரவத்தி(கணவனின் சகோதரன் மனைவிக்கு )
ஓர் பெண் சுமக்கும் புதியதாய் மலரும் உறவுக ள் (தனது மகளையோ அல்லது மகனையோ திருமணம் முடித்த பின்)
மாமியார்
பெரிய மாமியார்
சின்ன மாமியார்
ஓர் பெண் சுமக்கும் புதியதாய் பூக்கும் உன் னத உறவுகள் (தனது மகளுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் முடிந்து குழந்தை பேறு பெற்ற பின்)
பாட்டி
பெரிய பாட்டி
சின்ன பாட்டி
ஓர் பெண் சுமக்கும் புதியதாய் பூக்கும் உன்னத உறவுகள் (தனது மகள்(ன்) வழி – பெயரன் அல்லது பெயர்த்திக்கு )
கொள்ளு பாட்டி
ஓர் பெண் சுமக்கும் புதியதாய் பூக்கும் உன்னத உறவுகள் (தனது பெய ரனின், பெயர்த்தியின் குழந்தைக்கு )
எள்ளு பாட்டி
போன்ற உன்னதமான உறவுகள் உண் டு.
இன்னும் எளிதாக சொல்லப்போனால், ஒரு ஆண் / ஒரு பெண் திரு மணம் முடித்தபின்னர் தனது மனைவி / கணவன் யாரையெல்லாம் மாமா என்றழைக்கிறாளோ அவர்களெ ல்லாம் இந்த ஆணுக்கு / பெண்ணுக்கு பெரியப்பா சித்தப்பா முறைதான்! அதே போல் யாரை யெல்லாம் சித்தப்பா பெரி யப்பா என்றழைக்கிறாளோ அவர்கள் எல்லாம் இந்த ஆணுக்கு / பெண்ணு க்கு பெரிய மாமா சின்ன மாமா முறை தான்! என்ன உறவுகளே இப்போதாவது இதை தெரிந்து கொண்டு அவர்கள் உற வு முறைகளை சொல்லி சரியாக அழைத்து அன்போடு பழகி வள மோடு வாழ்ந்திடுங்கள்.
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
தம்பி மனைவி உறவின் பெர்யறென்ன
தம்பி மனைவியை அண்ணன் எப்படி அழைக்க வேண்டும்
உங்கள் மனைவிக்கு உங்கள் தம்பி மனைவி தங்கை முறை வருவதால், அவர், உங்களுக்கு கொழுந்தியாள் அல்லது மச்சினி
Kanavarin thangai manaiviku enna murai vendum
பெண்ணுக்கு அந்த கணவரின் தங்கை, நாத்தனார் முறை
Akkal thambi Uravu muraiyil thambi manaviyin Uravu murai peyar enna
en paatiyin (ammavin amma) annanin maagalin magan ennakku yenna murai vendum?
என் பாட்டியின் (அம்மாவின் அம்மா) அண்ணனின் மகளின் மகன் எனக்கு என்ன உறவு முறை வேண்டும்?
உறவுகளின் நினைவுற்றல் !! 👇🏻👇🏻👇🏻
ஓரு ஆணும் பெண்ணும் தெருவில் நடந்து செல்கிறார்கள். ஆணின் மாமியார் பெண்ணின் மாமியாருக்கு அம்மா எனில் , அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு ???
நமக்கு விடை தெரிந்தால் நல்லது !!! 😊 நமது அடுத்த தலைமுறைக்கு விடை தெரிந்தால் மிகவும் நல்லது !!!! 😊😊