பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியரான சிரேயா சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா நரசிம்மன், பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, அண் மையில் நுங்கம்பாக்கம், ராமாராவ் கலா மண்டப கர் நாடக சங்க கலையரங்கத்தி ல் கோலாகலமாக நடந்தே றியது. திட்டத்தட்ட, ஒருமினி கல்யாண வைபவ நிகழ்ச்சி யாக, இந்த அரங்கேற்றம் இருந்தது. நாட்டியம், இசை போன்ற கலைகளே, மக்களி டையே ஒற்றுமை, நட்பு, நல் லெண்ணத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட கலைகள்.
பரதாஞ்சலி நாட்டியப் பள்ளியின் குரு, நாட்டியாச்சார்யா அனிதா குகா, நாட்டியம் மட்டுமின்றி, நல்ல விஷயங்களையும் தன் சிஷ்ய மணிகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர். முதலிடம் பெற்று விளங்குவதால், நாட்டியத் துறையில் மிக உயர்வான நிலையை அடைந்து, நல்ல புகழுடன் விளங்குவதோடு, இறைவனின் மீது அசைக்க முடியாத பக்தியும் உடையவர் என்பதால், அவருடைய நட ன வடிவமைப்பில், கூடுதல் கவனத்துடன் அக்கறை செலுத்தி, சிற ப்பாகத்திட்டமிட்டு நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் ஆற்றலுடன் விள ங்குகிறார் என்று புகழும், பாராட்டும் பெற்றுள்ளார் அனிதா குகா.
சிரேயா சுரேஷ், ஐஸ்வர்யா நரசிம்மன் இருவருடைய கொடியுடலும், பிடியிடையும், உயரமும், அழகிய முகமும், விழிகளும் அவர்கள் மே டையில் தோன்றிய உடனேயே, ரசிகர்களை கொள்ளை கொண்டன . பாரம்பரிய தோடய மங்களம் (நாட்டை – ஆரபி – பந்துவராளி) ராக மாலிகை – தாள மாலிகையில் கருட கமன வரிகளில், கருடனின் அசைவுகளை முத்திரையாக அழகுற ஆடியது மனம் கவர்ந்தது.
தஞ்சை நால்வருடைய புகழ்பெற்ற ஜதீசுவரம் (வசந்தா-ரூபகம்) (கலா ஷேத்திர குரு டாக்டர் ருக்மணி வடிவமைப்பு) பார்க்க கொள் ளையழகாக இருந்தது. சுருதி முத்திரைகள் படு ஜோராக, கண்களுக் கு விருந்தாக இருந்தது. பத்ம ஸ்ரீ மதுரை கிருஷ்ண அய்யங்காருடை ய (ராகமாலிகை – மிச்ர சாபு) அம்பாள்மீது இயற்றிய சப்தம் (கல்யா ணி-சாவேரி – சண்முகப்ரியா) போன்ற ராகங்களில் அம்பிகையின் சிறப்புகளையும், அசுரவதம் – கருணை இவைகளை மிக அழகாக நாட்டியத்தில் இருவரும் திறம்பட ஆடியது மனம் கவர்ந்தது.
நிகழ்ச்சியின் பிரதான வர்ணத்திற்கு, கீபோர்டு கலைஞர் பி.ஆர். வெங்கடசுப்ரமண்யன் இயற்றிய, “ஆனந்தம் என் சொல்லுவேன்!’ (சிம்மேந்திர மத்யம் – அமிர்த வர்ஷிணி – தோடி – அம்சாநந்தி) போன் ற ராகங்களில், மிக அருமையாக ஸ்ரீகிருஷ்ணர் மீது இயற்றப்பட்டு ள்ளது, உண்மையிலேயே ஆனந்தம் அளிக்கும் விஷயமாக கண்க ளுக்கும், கருத்திற்கும் நல்ல விருந்தாக அமைந்திருந்தது.
அருமையான பொறிபறந்த ஜதிகள், அடவு கோர்வைகள், பாத வே லைகள் பரவச மூட்டின. சஞ்சாரியாக குசேலருக்கு கண்ணன் கரு ணை புரிந்த வரலாற்று நிகழ்ச்சியில், குசேலருடைய பாதங்களை பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ணன் கழுவி, நீரை பயபக்தியுடன் தன் தலையி ல் தெளித்துக் கொண்டு, அவரை உபசரிக்கும் காட்சியின் வடிவமை ப்பு, பண்டைய நாட்களின் பண்பை அறிவுறுத்தியது. இது மட்டுமின் றி, காளிங்க நர்த்தனம் அடவுகளில் ராதா – கிருஷ்ண முத்திரைகள் அருமை.
நிகழ்ச்சியில் ஊத்துக்காடு வேங்கடகவியின் பதம் (நாட்டை – ஆதி) அம்புஜம் கிருஷ்ணாவின் ( சுத்தசாவேரி – ஆதி) எல்லாமே மிக உய ர்வாக கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்தன. வயலின் மேதை லால்குடி மோகன கல்யாணி ராகம் – ஆதி தாள வர்ணத்துடன் நிகழ் ச்சி உயர்வான நிருத்த, நிருத்ய – பாத வேலைகளுடன் அமர்க்களமா க இருந்தது. நாட்டிய வழங்குமுறை, மிக அழகாக, எழில் ததும்ப மன நிறைவை அளித்தது. ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடி னர் .
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் நந்தினி ரமணி, நாட்டியக் கலையில் தலை சிறந்தவர். நடனமணி. அவருடைய சிறந்த பாராட் டும், ஆசிகளும் குரு அனிதாவிற்கும், சிஷ்யைகளுக்கும் மனமார கிடைத்தது. சசிதரன் பாட்டும் சிறப்பாக இருந்தது. ராம்சங்கர் பாபு ( மிருதங்கம்) முருகானந்தம் (வயலின்) ரமேஷ் (குழலிசை) இவற்று டன் நிகழ்ச்சி தொகுப்பாளினி ரேவதி சங்கரனுடைய இலக்கிய நடை தொகுப்பு நன்றாக இருந்தது.
– மாளவிகா