Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி விசாலினி.

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச்சேர்ந்த விசாலி னி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக் கிறாள்.
தற்போது அவள் பல பொ றியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி. டெக்., இறுதியாண்டு படிப்பவர்க ளுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக் கழகங்கள் நடத்தும் சர்வ தேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறா ள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம்முன் நீட்டுகின்ற அவ ரது விசிட்டிங் கார்டு நம்மை மேலும் வியக்க வைக்கிறது.
திருநெல்வேலி, IIPE லெட்சுமிராமன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி யின் ஒன்பதாம் வகுப்பு மாணவியான விசாலி னியின் விசிட்டிங் கார்டு, அவருக்கு நுண்ணறிவுத் திறன் எனப்படும் IQ 225 இருப்பதாகப் பதிவு செய்து ள்ளது. அப்பா கல்யாண குமாரசாமி எலெக்ட்ரிகல் காண்டிராக்டர். அம்மா சேது ராகமாலிகா, அகில இந்திய வானொலி யில் அறிவிப்பாளராக இருந்தவர். தங்கள் ஒரே மகளின் சுய நுண் ணறிவுத்திறன் சார்ந்த மேம்பாடுகளுக்காக, சிறுமி விசாலினியுடன் இணைந்து பயணித்து வருபவர்.
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே வேலை வாய் ப்புகளுக்காகப் பங்கேற்கும் இணையதளத் தேர்வுகளில், விசாலினி கடந்த இரண்டு வருடங்களாகப் பங்கேற்று மிக அதிக மதிப்பெண் கள் பெற்று உலகளவில் சாதனை புரிந்து வருகிறாள். MCP (2011) 87 சதவிகிதம், CCNA (2011) 90 சதவிகிதம், CCNA Security (2011) 98 சதவிகிதம், OCJP (2011) 95 சதவிகிதம், (பாஸ்போர்ட் எடுத்திருந்தா ல்தான் தேர்வு எழுதவே அனுமதி) IELTS (2012)ல் Band-6, CCNP (2012) 81 சதவிகிதம், Exin Cloud Computing (2012) 100 சத விகிதம், IST!B-ISEB (ஜூன் 2, 2012) 100 சதவிகிதம் எனத் தேர்ச்சி பெற்றிருக் கிறாள் விசாலினி.
மழைக்காகிதத்தில் கிறுக்க‍ப்பட்ட‍கிறுக்க‍ல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: