Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பழிவாங்கல்களும், படையெடுப்புகளும்

 

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இய ங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே இரு க்கிறார்கள் 

விவாகரத்து பெற்று தாய் வீட் டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந் தும், தாய் வீட்டில் சரியான ஆத ரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண் கள் கணவனுடன் வாழ்க்கை யை ஓட்டிக் கொண்டிருக்கிறா ர்கள்.

இவை மாற வேண்டுமானால் ஆண்கள் கொஞ்சம் கீழிறங்கி வந்து பெண்களிடம் மனம்விட்டுப் பே சவேண்டும். ஒருவருக்கொரு வர் என்ன மனக்குறைகள் என் பதை தெரிவிக்க வே ண்டும்.
 
அப்படி ஒருவருக்கொருவர் தங் களது மனக்குறைகளைக் கூறு ம்போது அதனை மறுக்கவோ, தட்டிக்கழிக்கவோ செய்யாமல், அந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்பதை பற்றி சிந்தி யுங்கள்.
 
ஒரு வீட்டில் இரு துருவங்களாக வாழும் கணவன் மனைவியால் அவர்களது குழந்தைகள்தான் அதிகம் ஏங்கிப் போவார்கள்.
 
ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ் வொருவர் பிரச்சினைக்கு கா ரணமாக இருப்பார்கள். சில வீடுகளில் கணவன், சில வீடு களில் மனைவி, பல வீடுகளி ல் மாமியார், நாத்தனார், மாம னார் என்று இந்த பட்டியல் நீளும்.
 
கணவன் – மனைவி என்பவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக் காவிட்டாலும், ஒருவரது கருத்தை ஒருவர் மதிக்க வேண்டும் என்ப து இயல்பான கொள்கையாக இருக்க வேண்டும்.
 
சண்டை போடலாம். ஆனால் சண்டையின் முடிவில் சமாதானமும் இருக்க வேண்டும். சண்டைப் போட்ட வுடனே சமாதானம் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் சண்டை போட்டு அந் த மனநிலை மாறியப் பிறகு அந்த விஷயம் பற்றி இருவரும் அமைதியாகப் பேசி தங்களது நிலை களை விளக்கி அந்த சம்பவம் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு இருவரும் வரவேண்டும்இல்லை என்றால், அந்த சம்பவம் பற்றி அடி க்கடிப்பேசி சண்டை தலை தூக்கும் நிலை ஏற்படும்.
 
கணவன் – மனைவி இருவரு க்குள்ளும் எந்த மனக்கசப்பும் நீண்ட நாளைக்கு நிலைத்து விடக் கூடாது. அப்போதைக் கு அப்போதே சில விஷயங்க ளை மறந்துவிடுவதுதான் தாம்பத்தியத்திற்கு நல்லது. பழிவாங்கல்களும், படையெடுப்புகளும் போருக்கு வேண்டுமானா ல் வெற்றியைத் தரலாம். தாம்பத்தியத்திற்கு அது முற்றுப்புள்ளியா கவே இருந்துவிடும்.கவனம் வேண்டும்.
{ இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: