Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் "திருவிளையாடல்" மறு வெளியீடு – வீடியோ

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்ற‍து.

இத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். ஔ வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக‌ டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்டத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனும் நக்கீ ரனாகவும் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் நடிப்பும நகைச்சுவையும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர் களையும் மிகவும் கவர்ந்தது.

பிரமாண்ட அரங்குகள் அமை த்து மெகா பட்ஜெட்டில் இப்பட த்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப் பா’, ‘இன்றொ ரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாத னை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட் டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

‘திருவிளையாடல்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புது ப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெரு கூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது.

– விதை2விருட்சம்

அத்தகைய சிறப்பு வாய்ந்த் திருவிளையாடல் திரைப்படத்தினை காண விருப்ப‍மா? (இதோ இந்த தொடர்பிலி (லிங்க்)ஐ சொடுக்கி (கிளிக் செய்து) கண்டு களித்திடுங்கள் 

Leave a Reply