Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கையறை வில்லன்கள் ? ?

 

செக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திரு க்கும் இன்றைய நிலையிலும் நிறை ய தம்பதிகள் மனதில் திருப்தியின் மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகி றார்கள் என்கின்றனர் பாலியல் நிபு ணர்கள்.

படுக்கையறை வில்லன்கள் என்னெ ன்ன? அவற்றைத் துரத்துவது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்…

* தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்பு

உங்கள் படுக்கை, தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்புக் கள மாக மாறிவருகிறதா? அதாவது, லேப் டாப்கள், செல்போன்கள், ஐ பாடுகள் போ ன்றவை நேற்றைய செய்தித்தாள்கள், ஆவணங்களுடன் `துண்டு’ போட்டுக் கொ ண்டால் செக்ஸுக்கு இடம் ஏது?

தீர்வு: நவீன தொழில்நுட்ப சாதனங்களை படுக்கையறை பக்கம் கொண்டு போகா தீர்கள். அதற்குப் பதிலாக, அழகான ஓவியங்கள் படுக்கையறைச் சுவர்களை அலங்கரிக்கட்டும். இதமான விளக்கு வெளிச்சம் இருக்க ட்டும். நல்ல படுக்கை விரிப்பும், பல குட்டிக் குட்டித் தலையணைக ளும் இடம்பிடித்திருக்கட்டும்.

* தொப்பை

தொந்தியும் தொப்பையுமாக சதை வழிந்தால் உடம்பின் எந்தப் பகுதி யையும் காட்டுவதற்கு ஆர்வம் பிற க்காது. போர்வைக்குள் புகத்தான் தோணும்.

தீர்வு : தீவிரமான உடற்பயிற்சிகளி ல் அல்லது `அட்ரினலின்’ சுரப்பை அதிகரிக்கச் செய்யும் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். அது உங்களின் உடம்பை கச்சிதமாக வைக்கும். செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டும்.

* மாத்திரைகள் `சாப்பிடுவது’

இன்று பலர், எல்லாவற்றுக்கு ம் ஒவ்வொரு மாத்திரையைப் போட்டுக் கொள்கிறார்கள். மனஅழுத்தம், நெருக்கடி, அசி டிட்டி, கொலஸ் ட்ரால் இவை போன்ற எல்லாவற்றுக்கும் மாத்திரை, தவிர, கர்பத்தடை க்கும் மாத்திரை போட்டுக் கொள்வது, அதை தொடர்ச்சியாகச்செய்வது உங்களின் செக்ஸ் வா ழ்க்கையைப் பாதிக்கும்.

தீர்வு : உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட மேம்பட நீங்கள் `சாப் பிடும’ மாத்திரைகளின் எண்ணிக்கை குறையும். தவிர, ஒவ்வொரு முறை நீங் கள் புதிதாக மாத்திரை சாப்பிடும்போ தெல்லாம் உங்களின் குடும்ப மருத்துவ ரிடம், அது செக்ஸை பாதிக்குமா என்று கேட்டு விட்டே சாப்பிடுங்கள்.

* புகையும் பிரச்சினைகள்

கணவன்- மனைவிக்கு இடையே தீர்க்க ப்படாத பிரச்சினை ஏதாவது இருந்தால் அதற்கு முதலில் பலியாவது படுக்கையறை உறவுதான் என்கின்றன ர், செக்சாலஜிஸ்ட்கள். அதை நீங்க ளேகூட அறியாமல் இருக்கலாம்.

தீர்வு: மனம்விட்டுப்பேசுவதைவிட சிறந்த தீர்வு இல்லை. ஆனால் சண் டைகள் அடிக்கடி ஏற்படுகின்றன, பே சுவதால் ஒன்றும் பயனில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் சரியான ஆலோசனையை நாடலாம். ஒரு நல்ல ஆலோசகர் உங்களின் தீர்க் கப்படாத பிரச்சி னைகளையும், அவற்றை எப்படித் தாண்டி வரலாம் என்பதையும் உங்களுக்குக் கூறுவார்.

* வேட்டு வைக்கும் `விருந்து’

நீங்கள் எப்போதும் பார்ட்டி, நண்பர் களுடன் இரவில் நீண்டநேர உரை யாடல் என்று `பிசி’யாக இருப்பவரா ? அப்படியானால் தாம்பத்திய உறவு பிரச்சினைதான். நேரங்கடந்த, ஒழு ங்கற்ற உணவும் வில்லனாகிவிடும்

தீர்வு : அன்றாட அழுத்தங்களிலிருந்து விடுபட உங்கள் உடம்புக்கு நேரம் தேவைப்படுகிறது. மீண்டும் சக்தி பெறுவதற்கான சிறந்த வழி தூக்கம். அடிக்கடி பார்ட்டிகளில் பொழுதைக் கழிப்பதைத் தவிருங்க ள்.

* `குழந்தை’ கவலைகள்

சீக்கிரமாக அம்மா- அப்பாவாக `புரமோஷன்’ பெற வேண்டும், அதற் காக குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட நாட்களில் உறவு கொண்டா ல்தான் கருத்தரிக்கும் என்ற எண்ணத்தோடு `அதில்’ ஈடுபடுவது. அப் போது அது மருத்துவரீதியான செய ல்பாடாகிவிடும். செக்ஸ் இன்பத்தை த் தூரத்துரத்திவிடும்.

தீர்வு : ஆய்வுகளின்படி, 10 சதவீதம் பே ருக்குத்தான் முதல் உறவு சரியாக அமைகிறதாம். கருத்தரிப்பதற்காக கு றிப்பிட்ட நாட்களைக் குறி வைத்து உறவில் கவனம் செலுத்த வே ண்டியதில்லை. நல்ல `ரிலாக்ஸான’, திருப்தியான உறவில் கருத்த ரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமே.

* உடல், மனநலப் பிரச்சினைகள்

நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த `பிர மோஷன்’ வராமல் போயிருக்கலா ம். புதிய நகரத்துக்கு இடம்பெயர் ந்து, அங்கு இன்னும் யாரும் உங்க ளுக்கு பழக்கம் ஆகாமல் இருக்க லாம். அப்போது எந்தச்செயலிலும் நீங்கள் ஆர்வம் காட்டாது இருக்க லாம்- செக்ஸையும் சேர்த்துத்தா ன். மனஅழுத்தம் போன்றவற்றால் `எண்டோக்ரைன்’- `தைராய்டு’ சம்பந்தமான பிரச்சினைகள் எழுந்து, செக்ஸ் ஆர்வத்துக்குத் தடைக் கல்லாகி விடலாம்.

தீர்வு:உங்கள் உடம்பில் ஏதோ தவறு என்று நீங்கள் நினை க்கும்போதே மருத்துவ உதவி யை நாடுங்கள். ஆரம்ப கட்ட சிகிச்சை முழுமையான குண மளிக்கும். மனச்சோர்வு, கவ லை உங்களை வாட்டும்போ து உங்கள் துணையின் அன் பான அணைப்பை நாடுங்கள். மெல்ல மெல்ல நீங்கள் உங்களைப் பிணைத்திருக்கும் கவ லைத் த ளை களிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, படுக்கையில்` நல்ல நேர த்துக்கும்’ அது வழிவகுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

{ இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: