ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ‘ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி’பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).
கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!
‘ அளித்தால் தான் நண்பர்களும்
அண்டுகிறார்; இல்லை எனில்
அவலம் செய்வார்!
களித்தாலோ பலபேர்கள்
புதுப்புதிய உறவுகளாய்
கை கொடுப்பார்!
விழித்தாலே போடும் ‘அட
கண்ணா நீ வா’வென்று;
விரைந்து வந்து
ஒளித்தாரை சிந்திடுவான்;
உன்வாழ்வை உயர்த்திடுவான்
ஓகோ வென்று! (84)
களித்தாலோ பலபேர்கள்
புதுப்புதிய உறவுகளாய்
கை கொடுப்பார்!
விழித்தாலே போடும் ‘அட
கண்ணா நீ வா’வென்று;
விரைந்து வந்து
உன்வாழ்வை உயர்த்திடுவான்
ஓகோ வென்று! (84)
ஓகோ வென்றிருந்தானா,
ஓங்கு புகழ் கொண்டானா,
உலகம் போற்ற
வாகான மாளிகைகள்
வளர்த்தானா குசேலன் என்னும்
வறுமை வள்ளல் ?ஆகாவென் றவன்வாழ்வில்
அத்தனையும் கொடுத்தானே
அருமை நண்பன் !
சாகாத இதிகாசத்
தத்துவத்தில் உள்ளதையும்
தவறென் பீரோ ! (85)
தேடியேனும் படிக்க வேண்டாமா நண்பர்களே.. ஸ்ரீ கிருஷ்ண அந்தாதியை !!

கோபால் மனோகர்