கவர்ச்சியாக நடிப்பது கேவலமான துணிச்சல் என்றார் மோனிகா. மாற்று திறன் இயக்குனர் டி.சாமிதுரை இயக்கும் படம் ‘குறும்புக்கார பசங்க. சஞ்சீவ், மோனிகா ஜோடி. இதில் நடித்தது பற்றி மோனிகா கூறியதாவது: லாரன்ஸி டம் உதவி இயக்குனராக பணியாற்றியதா க கூறி என்னிடம் கதை சொல்ல வந்தார் சாமிதுரை. முதலில் அவரை பார்த்ததும் மாற்றுத் திறனாளியான இவரால் படம் இயக்க முடியுமா? உண்மையில் லாரன்ஸ் உதவியாளர்தானா? என எனக்கு சந்தேகம் வந்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித் து லாரன்ஸின் உதவியாளர்தான் என்பதை உறுதி செய்துகொண்டேன். பிறகுதான் கதை கேட்டேன். பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டேன். கிராமத்து பெண் வேடம் ஏற்றிருக்கிறேன். சஞ்சீவ் ஹீரோ. ‘உங்களுக்கு கவர்ச்சியாக நடிக்க துணிச்சல் இல்லையா என்கிறார்கள்?
அது கேவலமான துணிச்சல். அந்த துணிச்சல் எனக்கு கிடையாது. கலாசாரத் தை மதிப்பவர் கள் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள். ஏற்கனவே சிலந்தி என்ற ஒரு படத்தி ல் புரமோஷனுக்காக பா டல் எடுக்கிறோம் என்று சொல்லி என்னை கிளாம ராக நடிக்க வைத்து சில காட்சிகள் எடுத்தார்கள். பின்னர் அதையே பிரதானமாக வைத்து வர்த்தகத்துக்காக பயன்படு த்தி விட்டார்கள். இது என் மனதை மிகவும் பாதித்தது. இவ்வாறு மோனிகா கூறினார்.