உலகில் பத்து நாடுகளில் மட்டுமே சாம்சங் தன் கேலக்ஸி டேப்ளட் பிசி நோட் 800 ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் இ ந்தியாவும் ஒன்று. இதனை காலக்ஸி நோட் 10.1 எனவும் அழைக்கின்றனர். பேனா, பேப்பர் கொண்டு இய க்குவது போல துல்லிய மான இமேஜ் இதன் 10.1 அங் குல திரையில் கிடைக்கிறது. அடோப் நிறுவனத்தின் போட் டோ ஷாப் டச் இதில் பதியப் பட்டு இயங்குகிறது. இதன் அகல திரையின் ஒரு பாதியில் புரோகிராம் ஒன்றையும், இன்னொரு பாதியில் மற் றொரு புரோகிராமினையும் இயக்க முடியும். இதனால், பயனாளர்க ள் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டே, இணைய தளப் பயன்பாட் டினையும் மேற்கொள்ள முடியும்.
இந்த திரையில் எஸ் நோட், இன்டர்நெட் பிரவுசர், வீடியோ பிளேயர், இமெயில், கேலரி, போலாரிஸ் ஆபீஸ் ஆகிய புரோகிராம்கள் சப் போர்ட் செய்யப்படுகின்றன. இவற்றுடன் அலாரம், எஸ்நோ ட், மியுசி க் பிளேயர், இமெயில், கால்குலேட்டர், வேர்ல்ட் கிளா க் ஆகியவற்றிற்கான மினி அப் ளிகேஷன்ட்ரே தரப்பட்டுள்ளது.
இதில் 1.4 கிகா ஹெர்ட்ஸ் குவா ட் கோர் ப்ராசசர், 2 ஜிபி ராம் நினைவகம் தரப்பட்டுள்ளன. இதனால், மல்ட்டி டாஸ்க்கிங், உயர் ரக கிராபிக்ஸ் அப்ளிகேஷன், வேகமான செயல்பாட்டினை மேற்கொள் ள முடிகிறது. இதில் 5 எம்.பி. திறனுடன்கூடிய கேமரா இணைக்கப்பட்டுள்ளது. அத்து டன் முன்புறமாக 1.9 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள் ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.39,900. இதனுடன் இணைத் துப் பயன
்படுத்த டெஸ்க்டாப் ஸ்டாண்ட், பவுச், புக் கவர், வே காம் பேனா, கார் சார்ஜர், ஸ்டை லஸ் பேனா, எச்.டி.டி.வி. அடாப் டர் ஆகிய வை தனியே விலைக்குக் கிடைக்கின்றன.
நாளேடு ஒன்றில்