Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி

 

இது, கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறி தாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொ ழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின் றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப் படி குறைவாக ரத்தம் அளிக்கப்படு ம் நிலையைத்தான், “இஸ் கெமியா ‘ (ischemia) என்றழைக்கின்றனர்.

அஞ்ஜினா என்றால் என்ன?: அஞ்ஜினா என்பது, சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி அல்லது சுகவீனம்.

அதை, இதயம் அதிக ரத்தம்கேட்டு அழுவதாக எடுத்துக்கொள்ளலா ம். இதயத்துக்கு வேண்டிய பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள், தேவையான அளவுக்குக் கிடைக்காமையைக் குறிக் கும், ஓர் அறிகுறிதான் அது. இந்த வலி யைப் பொதுவாக, நெஞ்சின் இடது அல் லது வலது புறத்தில் அல்லது நெஞ்சின் முன்புறம் அல்லது கைகளின் மேற்பகு தியில் உணரலாம். குறிப்பாக, இடது மேல் பகுதியில், மேல் முதுகில், தோள் களில், தொண்டையில், முகவாய்க் கட் டை அல்லது தாடையில் அல்லது வயி ற்றின் மேல் பகுதியில் உணர முடியும்.

நாம் சும்மா இருக்கும்போது, ஓய்வுநேரத்தில் தோன்றாமலும், மரு ந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால், அதைக் கட்டு க்குள் உள்ள(Stable angina) அஞ் ஜினா என்கிறோம். அஞ்ஜினா அளவு அதிகமாகி, அடிக்கடி மற் றும் ஓய்வுநேரத்திலும் வலி தோ ன்றி, மருந்துகளால் கட்டுப்படுத் த முடியாதநிலை ஏற்பட்டால், அதைக் கட்டுமீறிய அஞ்ஜினா (Unstable angina)என்கிறோம். இது , மாரடைப்பில் கொண்டு போய் விடக் கூடும்.

முழு ஓய்விலிருந்தும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும், பலனி ல்லாமல், வலிதொடர்ந்து நீடித்தால், நோயாளிக்கு அவசரமாக கொ ரானரி அஞ்ஜியோகிராபியும் (Coronary Angiography)அதைத் தொடர்ந் து, அஞ்ஜியோபிளாஸ்ட்டி (Angioplasty) அல்லது கொரானரி பைபா ஸ் அறுவைச்சிகிச்சையும் செய்யவேண்டியிருக்கும். அஞ்ஜியோ கிராபி என்பது, ரத்தக் குழாய்க்குள் ஒரு திரவத்தைச் செலுத்தி, எக் ஸ்ரே படம் எடுத்தல். அஞ்ஜியோபிளாஸ்ட்டி என்பது, அடைப்பு அக ற்றல். பைபாஸ் சர்ஜரி என்பது, ரத்தக் குழாய்களை வழிமாற்றிப் புற வழியில் இதயத்துக்கு ரத்தம் செலுத்துதல்.

டாக்டர் கிரிநாத்
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
போன்: 044-2829 0200, விரிவு: 6437

தினமலர்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: