Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் தொழில்

 

பாய் என்ற உடனேயே நினைவு க்கு வரும் ஊர் நெல்லை மாவட் டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய் கள் தயாரிக்கப்படுவதால் இவ் வூர் உலகப்புகழ் பெற்று விளங் குகிறது.

அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பாய் களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிற ப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை( பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளா ன கோ ரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. னால்  தற்போது. . . 

மூலப்பொருட்களின் விலை உயர்வால், கோரைப்பாய் முடையும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, சிந்தாமணியூரை சுற்றி, 25 க்கும் மேற்பட்ட பாய் உற்பத்தி நிறுவ னங்கள் உள்ளன. வீடுகளில், படுப்பத ற்கும், விசேஷங்களு க்கும் பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோரைப் புல் தங்குதடையின்றிசென்றுகொண் டிருந்த பாய் வியாபாரம், இன்று நலி வடைந்துவிட்டது. பாய் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வால், தொழிலில் நசிவு ஏற்பட்டுள்ளது.

சிந்தாமணியூர், சக்தி முருகன் கோரைப்பாய் நிறுவன அதிபர் மணிக் கவுண்டர் கூறியதாவது: பாய் தயாரிப்பது என்பது, குடிசைத் தொழி லாக உள்ளது. நாங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பாய்களை உற்பத்தி செய்து வருகிறோம். பாய் தயாரிப்பதற்கு, கோரைப்புல், நூ ல், சாயம், தடையின்றி மின்சாரம், விசைத்தறி மற்றும் கூலி ஆட் கள் அவசியம். முன்பெல்லாம், கைகள்மூலம் பாய்கள் நெய்யப்பட்டு வந் தன. தற்போது, விசைத்தறிமூலம் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. பத்தமடை, பரமத்தி, வேலூர், பா ண்டமங்கலம், கரூர், முசிறி, தொ ட்டியம் ஆகிய இடங்களில் இருந் து பாய் தயாரிக்க பயன்படும், கோ ரைப்புல் கொண்டு வரப்படுகிறது. ஓராண்டுக்குமுன், ஒரு கட்டு கோ ரைப்புல், 480 ரூபாயாக இருந்தது, இன்று, 630 ரூபாயாக உயர்ந்துள் ளது. கடந்த ஆண்டு, ஒரு கிலோ சாயம், 500 ரூபாயாக இருந்தது, இன்று, 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாய் உற்பத்தி செய்வதற்கு, கூலி ஆட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வாகன செலவு: ஆட்களை நியமிக்கும்போது, அவர்களுக்கு, முன் பணமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டியுள்ள து. கரூர் மாவட்டத்தி ல் இருந்து, கோரைப்புல்லை வாகனங்களில் ஏற்றி வருவதற்கான டீசல் செலவு, சரக்கு இறக்கு கூலி, பாய் உற்பத்தி செய்தபிறகு அதை வாகனங்களில் ஏற்றும் செலவு என, செலவுகள் கூடிக்கொண்டே செல்கின்றன. பாய் தொழில் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்க ளின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், தொழில் படுத்து விடு மோ என்ற பயம் பலருக்கு வந்து ள்ளது.

12 பாய்கள்: ஒரு நிறுவனத்தில், குறைந்தபட்சம், 20பேர் பணிபுரிவ ர். ஒரு கட்டு கோரைப் புல்லில் இருந்து, 12 பாய்களை தயார் செய் ய முடியும். இங்கு உற்பத்தி செய்ய ப்படும் பாய்களின் நீளம், ஐந்தரை அடி முதல், ஆறு அடி வரையும், அகலம், 47 அங்குலமாகவும் உள்ளன.இயந்திரங்கள்மூலம், 10 நிமி டத்துக்கு ஒரு பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. பாய்களை கட்டிக் கொடுப்பது, பாய்க்கு முடிச்சுபோடுவது, சாயம் கலப்பது என, அனை வருக்கும் கூலி கொடுத்தாகவேண்டும். இங்கு உற்பத்தி செய்யப்ப டும் பாய்களை, உள்ளூர் வியாபாரிகள் வாங்கிச்சென்று, விற்பனை செய்கின்றனர். இவ்வா று அவர் கூறினார்.

ஓமலூர் பாய்களுக்கு அதிக வரவேற் பு: ஓமலூர் பகுதியில் உற்பத்தி செய்ய ப்படும் பாய்கள், நல்ல தரத்துடன் இரு ப்பதால், இவற்றிற்கு, கோல்கட்டா, பெ ங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் இ ப்பாய்கள் மிக அதிகளவில் மேற்கண் ட இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஜனவரி முதல், மே மாதம் வரை, பாய் விற்பனை சூடுபிடித்து காணப் படும். அப்போது உற்பத்தி அதிகமாக இருக்கும். முன்பு, இரண்டு மாத த்துக்கு ஒருமுறை, 5,000 – 6,000 ரூபாய் வரை மின் கட்டணம் செலு த்தி வந்த, பாய் உற்பத்தியாளர்கள், தற்போது, மின்சார கட்டணம் உய ர்த்தப்பட்டுள்ளதால், பத்தாயிரம் ரூபாய்வரை கட்டவேண்டி உள்ளது . இதனாலும் பாய் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: