குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இதனை குழந்தைகளின் நலன்கருதி பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டும் ௭ன கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
‘௭ன் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கவேண்டும்’ ௭னக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு சமீபத்தி ல், கர்நாடக மேல் நீதிமன்ற த்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, ‘குடும்பத்தை நல்ல முறையில் கவ னித்துக்கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை.
இதுபோன்ற விடயங்களை, குழந்தைகளின் நலன் கருதி பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டும்’ ௭ன தெரிவித்தார். நீதிபதியின் இக்கரு த்துக்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ ௭னவும் அவை பிரசாரம் செ ய்து வருகின்றன. இதுதொடர்பில் பெண் வழக்கறிஞர்கள் சிலரு ம் மேல்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து, மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.
Good