Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேங்கஸ்யூரன்ஸ் திட்டங்களை எடுக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?

சமீப காலமாக படுவேகமாக பிரபலமாகி வருகிறது பேங்கஸ்யூரன் ஸ், அதாவது வங்கிகள்மூலம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை விற்ப னை செய்வது. கடந்த 2010-11-ல் மட்டும் பேங்கஸ்யூரன்ஸ்மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு கிடைத்த முதல் பிரீமியம் சுமார் 11,062.63 கோடி ரூபாய். இது மொத்த முதல் பிரீமியத்தில் சுமார் 13.30 சதவிகித ம்.
 
பெரிய நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் மட்டுமே விற்பனையா கி வந்த இந்த பேங்கஸ்யூரன்ஸ், இப் போது சிறிய ஊர்களில் உள்ள வங்கி க் கிளைகளிலும் விற்பனையாகத் தொடங்கிவிட்டது. இந்த பேங்க ஸ்யூரன்ஸ் திட்டங்களை எடுக்கும்போது என்னென்ன விஷயங்க ளை கவனிக்க வேண்டும்? இதிலுள்ள சாதக, பாதகங்கள் என்ன?
பேங்கஸ்யூரன்ஸ்..!

”இந்திய காப்பீட்டுத்துறை தனியார்மயமானவு டன், காப்பீடு விற்பனையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாறுதல் இந்த பேங்கஸ்யூரன்ஸ். மிக ச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இது, இன்று தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விற்ப னையில் முக்கிய பங்கு அளிக்கிறது.

பேங்கஸ்யூரன்ஸ் விற்பனை முறை ஐரோப்பிய நாடுகளில் முதலில் தோன்றி, பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது இந்தி யாவில் இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட் டு வாரியமான ஐ.ஆர்.டி.ஏ-ன் வரை முறைகளுக்குட்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக காப்பீ ட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்களுடைய பல்வேறு இன்ஷூரன்ஸ் திட்டங்களை வங் கிக் கிளைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள ஐ.ஆர்.டி.ஏ. வரைமுறைகளின்படி, ஒரு வங் கியானது ஒரு ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் திட்டங்களை மட்டுமே விற்க முடி யும்.

வங்கிகளின் பங்கு!

வங்கிகள் தங்களுக்குப்பொருத்தமான காப்பீட்டு நிறுவனங்களுட ன் ஒப்பந்தம்செய்தபிறகு, தங்க ள் அலுவலர்களில் சிலரை தே ர்வுசெய்து காப்பீடு விற்பனை செய்வதற்கான பயிற்சி மற்று ம் ஐ.ஆர்.டி.ஏ. லைசென்ஸை யும் அளிக்கிறது. இந்த லைசெ ன்ஸ்பெற்ற வங்கி அலுவலர்க ளை ‘ஸ்பெசிஃபைடு பெர்சன் ஸ்’ (Specified  Persons) என்று அழைக்கிறார்கள். இவர்கள்தா ன் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் காப்பீட்டுத் திட்டங்க ளை விற்பனை செய்வார்கள். வங்கிகள்மூலம் நாம் தனி நபருக்கா ன காப்பீடு (Individual insurance scheme) திட்டங்களையும் குரூ ப் இன்ஷூரன்ஸ் திட்டங்களையும் வாங்க முடியும்.

மேலும், வங்கிகள் தங்களது வங் கிசார்ந்த திட்டங்களில் பயன்பெறு ம் வாடிக்கையாளர்களின் தேவை யைக்கருதி, வாடிக்கையாளர்க ளை குழுப்படுத்தி காப்பீட்டுத் திட்ட ங்களை குழு காப்பீடாக (Group depositors insurance, Group loan assurance) வழங்குகின்ற ன.

சாதகங்கள்!

வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை வாங்குவதில் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் எனில், நம் வீட்டுக்கு அருகில் உள்ள வங்கி க்கிளையிலேயே இன்ஷூரன்ஸ் பா லிசி எடுத்துவிடலாம். நமக்கு தே வையான ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு திட்டங்களை ஒரே இடத்தி ல் கிடைக்க வழிசெய்கிறது. நகர்ப் புறம் அல்லாத (Non Urban Market) இடங்களில் உள்ள வங்கிகள் மூலம் சாதாரண மக்களுக்கும் இன்ஷூரன் ஸ் கிடைக்க வழி செய்து தருகிறது.
வங்கி அலுவலர்கள் சரியான திட்டங்களையும் ஆலோசனைகளை யும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இயலும். வங்கிகள் நம் வீட்டு க்கு அருகில் இருப்பதால் விற்பனைக்குப் பின் தேவையான சேவைகளையும் நாம் எளிதில் பெறலாம்.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களு க்கு ஏற்ப தேவையான புதிய திட்டங்களை தருமாறும் காப்பீட்டு கம்பெனிகளை வற்பு றுத்த முடியும். குறிப்பாக, கடன் பெறும் வா டிக்கையாளர்களுக்காக மட்டும் சில திட்ட ங்களை, உதாரணமாக குரூப் கிரடிட் இன் ஷூரன்ஸ், குரூப் லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களை பெற முடியு ம். இவை வங்கி வாடிக்கையாளர்களுக்காக வங்கிகள் மட்டும் விற் பனை செய்யும் திட்டங்களாகும். மேலும், வங்கிகள்மூலம் காப்பீட்டு த்திட்டங்கள் விற்பனை செய்வதன் மூலம் விநியோகச்செலவு கணிச மாக குறைய வாய்ப்புள்ளது. இதனா ல் பிரீமியம் குறைவதற்கும்  வாய்ப் புள்ளது.

பாதகங்கள்!

பேங்கஸ்யூரன்ஸில் சில பாதகங்க ளும் இருக்கவே செய்கின்றன. முத லில், வங்கிக் கிளைகள் தங்களது விற்பனை டார்கெட்டை முடிப்பதற் காக வங்கிக்கு வரும் வாடிக்கையா ளர்களிடம், குறிப்பாக வங்கியில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாள ர்களிடம் காப்பீட்டுத்திட்டங்களை விற்பனைசெய்கின்றன. இத்தகை ய வாடிக்கையாளர்கள், தமது தொழிலுக்காக வங்கிக் கிளைகளை நம்பிஉள்ளதால், மறுக்க முடியாத சூழ் நிலையில், காப்பீட்டுத் திட்ட ங்களை வாங்குகின்றனர். வாடிக்கையாளர் இந்த பாலிசிகளை விரும்பி வாங்கா ததால், முதலாம் ஆண்டு முடி ந்தபின், பலரும் அந்த பாலிசியைத் தொடருவ தில்லை.

சில குறிப்பிட்ட வங்கிச் சேவைகளுட ன் காப்பீட்டுத் திட்டங்கள் இணைக்கப் பட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக ஐ.ஆர்.டி.ஏ. சில விதி முறைகளை கொண்டு வந்த பிறகும், இது மாதிரியான காப்பீட்டுத் திட்டங்களை விற்பதன்மூலம் வங்கி கள் நிறைய வருமானம் பெறுகின்றன. இந்த வருமானத்தை தனியா ர் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்குப் பிரித்து அளிக்கின்றன. இத னால் வங்கி ஊழியர்கள் தங்கள் டார்கெட்டை அ டையவும், அதிக கமிஷன் கிடைக்கும் என்கிற ஆ சையாலும் இந்த திட்டங் களை விற்கின்றனர். இத னால் வாடிக்கையாளர்க ளுக்குத் தேவையில்லாத திட்டங்கள் தலையில் கட் டப்படவும் வாய்ப்புண்டு.

வங்கிகள் காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண் டு, வேறொரு காப்பீட்டு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்து கொ ள்ள முடியும். இப்படி காப்பீட்டு நிறுவ னம் மாறும்போது (வங்கிக் கிளைக ள் புதிய காப்பீட்டு நிறுவனத்தின் வி ற்பனையில் முனைப்பாக இருப்பதா ல்) முன்பு விற்ற பாலிசிகளில் அதிக கவனம் செலுத்தாது. இதனால் நமக் கு சேவை குறைபாடு ஏற்படலாம்.

கவனம்..!

வங்கிக்கிளைகளில் குறைந்த பிரீமி யத்தில் எளிதாக இன்ஷூரன்ஸ் பா லிசி கிடைக்கிறதே என்பதற்காக கண்மூடித்தனமாக வாங்குவதை விட்டுவிட்டு, மற்ற எல்லா முதலீடுகளையும் ஆராய்வது போல், இத ன் சாதக – பாதகங்களை ஆராய்ந்து நமக்கான திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

{ இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: