(சிறுகதை)
முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண் டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிரு க்கிறான். சாலையோரம் ஏதோ கூட் டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடு கிறான். கூட்டத்தை விலக்கிக் கொ ண்டு என்னவெனப் பார்க்க முனை கிறான். விபத்தொன்று நடந்திருக்கி றது. அங்கு ஒரு இளம்பெண் இரத்த மொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறா ன் . அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான்.
அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவ மனைக் கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை வருடங்கழித்து உன்னை நான் இந்தக் கோலத்திலா பார்ப்பது?’ என மனம் வெதும்பியபடி.
அவளுக்கு இரத்தம் தேவைப்படவே தன்னுடைய இரத்தத்தைக் கொ டுத்தான். பக்கத்திலேயே இருந்து பார்த்து க் கொண்டான். கயல்விழி உடல்தேறி னாள். மெல்லக் கண்விழித்துப் பார்த்தா ள். எதிரே முகுந்தன். அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. பழைய நினைவுகளி ல் மூழ்க ஆரம்பித்தாள்.
கல்லூரி நாட்களில் முகுந்தனும் கயல் விழியும் அறிமுகம் ஆனார் கள். ஆண்பெண் வித்தியாசம் பார்க்காம ல் பழகிய நட்பு நாளாக நாளாக மிகவும் நெருக்கமானது.
முகுந்தனின் மனதில் அவளைத் தற்காலிகமாய்க் கூட பிரியமுடியா வருத்தம் ஏக்கம். தவித்தான் அவன். காதலை உணர்ந்தான். அவளிடம் தெரியப்படுத்தினான்.
அவளோ எப்போதும்போல இய ல்பாய் பதிலுரைத்தாள் ‘எனக்கு அப்படியொரு எண்ணமில்லை’ என்று. அன்று அவன் மௌனமா ய் வீடு திரும்பினான். புழுவாய்த் துடித்தான்.
ஆனாலும் கயல்விழி அவனிடம் எப்போதும்போலவே நட்போடு பழ கி வந்தாள். அவளின் அருகாமை முகுந்தனுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
கல்லூரியின் கடைசிநாள். அனைவ ரும் விடைபெற்றபடி பிரிந்து சென்ற னர். முகுந்தன் அமைதியாய் அமர்ந் திருந்தான். கயல்விழி மிகவும் இயல் பாய் முகுந்தனிடம் விடைபெற்றுச் சென்றாள். அவனின் முகத்தில் படர் ந்திருந்த சோகத்தை அவள் கவனிக் கத் தவற வில்லை.
நான்காண்டுகள் ஓடிவிட்டன. இன் று, கயல்விழி விபத்தில் அடிபட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.
நினைவுகள் அவளின் உடலுக்குள் புகுந்தது. மருத்துவமனையில் படுக்கையில் கிடந்ததை உணர்ந்தாள். படுக்கையை விட்டு எழ முய ற்சித்தாள். வலியை உணர்ந்தாள். முகுந்தன் ஓடிவந்து பார்த்தான். கண்ணீர் வந்தது அவன் கண்க ளில் இருந்து ஆனந்தத்தில்.
கயல்விழி அப்போதுதான் உண ர ஆரம்பித்தாள் ‘படிக்கும்போ தே காதலிப்பது தவறு. ஒழுக்க க்கேடானது.’ என்ற இந்த சமுதா யத்தின் போலியான ஒழுக்க மதிப்பிட்டால்தான் தன் மனதின் முன் ஒரு சுவரை எழுப்பிக் கொண்டு நான்காண்டுகளுக்கு முன் முகுந்தனின் காத லை ஏற்க மறுத்ததை.
கயல்விழி வலியையும் பொறுத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள். முகுந்தன் அவளைத் தாங்கிப்பிடிக்க ஓடிவந்தான். கயல்விழி அவனை காதலோடு இரசிக்கத் துவங்கினாள். அவளின் தலைகோதி விட்ட படி நெற்றியில் முத்தமொன்று கொடுத்தான் முகு ந்தன்.
கயல்விழியின் நினைவுகளில் ஒலித்தது மகா கவியின் பாடல்.
ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீரே!
– முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
அலைபேசி: 8754962106.