Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடியோடு அப்புறப்படுத்துவோம்!

 

செப்டம்பர் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் 

“ஒலிம்பிக் விளையாட்டில் ஊழல் விளையாட்டைச் சேர்த்திருந் தா ல் ஒட்டுமொத பதக்கங்களும் இந்தியாவுக்குத்தான் என்று உலகத் தார் கைக்கொட்டி (கை தட்டியல் ல) சிரிக்கும் அளவுக்கு நம் புண் ணிய பாரதத்தை ஊழல் குட்டைக் குள் மூழ்கடித்து விட்டார்கள் நம் அரசியல்வியாதிகள்  (அரசியல்வா திகள்).
 
நீர்..  நிலம்(ஆதர்ஷ்), காற்று (2 ஜி அலைக்கற்றை), ஆகாயம் (இஸ் ரோ), நெருப்பு (நிலக்கரி) இப்படி பஞ்ச பூதங்களையும் விட்டு வைக் கவில்லை. இப்பாதகர்கள். ஊழல் செய்துவிட்டு புன்னகையுடன் உலா வருகின்றவர்களை இந்தியாவி ல் மட்டுமே பார்க்க முடியும். காரணம் அதுதான் ஜனநாயகம் … அது தான் உப்ப்சப்பில்லாத . .. எவருக்கும் உதவாத ஒப்பற்ற சட்டம். 
 
ரயில் விபத்துக்குப்பொறுப்பேற்று தன பதவியைதுறந்த லால்பக தூ ர் சாஸ்திரியும், ஊழல் என்று கேட்ட மாத்திரத்திலே  அமை ச்சரவையைத் துறந்த கிருஷ் ணா மேனனும், தன் தாயின் வாடகை வீட்டிற்குத் தண்ணீ ர்க் குழாய்க்குட தன் அனுமதி யின்றி தரக்கூடாது என்று உத்தரவிட்ட காமராஜரும், தன் வீட்டுக்கு வந்த அரசுப் பொருட்களை அப்படியே வராந்தாவில் வைக்கச் சொன்ன அண்ணாவும் நம் நினைவில் கம் பீரமாய் நிற்கிறார்கள். ஆனால், இன்றைய கூட்டுக்கலவாணீகளோ  அற்பப்  புழுக்களைவிட நம் முன் அசிங்கமாய் நெளிகிறார்கள். 
 
கோடி கோடியாய் ஊழளெல் லாம் தெருக்கோடியில் இருக் கும் அப்பாவி இந்தியனையும் பாதிக்குமே என்ற கவலை எவ ருக்கு இங்குண்டு ? நீயும் திரு டன், நானும் திருடன், என்று அடித்துக்கொள்ள ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் நாடாளுமன்றம் என் மௌனம் ஆயிரம் கேள்விகளுக்கு விடை யளிக்கும் என்ற தத்துவ ஞானி பிரதமர் . . .நிலக்கரி எங்கும் போ கவில்லை என்று கண்டுபிடித்த நிதியமைச்சர் . . . ராஜினாமா கோஷ த்தைத் தவிர எதுவுமே தெரியாத எதிர்கட்சிகள் . . .என்ன நடந்தாலும் தன்னைக் காப்பற்றிக் கொல்வதிலேயே கவனமாய் இருக்கும் கூட் டணிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்தியாவை இரு ட்டு க்குள் தள்ளிவிட்டன. 
 
ஊழலை ஒழிப்பதற்குப் பதி ல் ஊழலையே ஒளிப்பதில்   பாகு பாடின்ரி இணைந்து, இந்தியா வை ஏமாற்றும் பொறுப்பற்ற வர்  எவராயிருப்பினும் எக் கட்சியைச் சார்ந்தவராய் இருப் பினும் அவர்களை அப்படியே அடி யோடு அப்புறப்படுத்த வே ண்டும். அப்போதுதான் . . 
 

உத்தமர் காந்தியின் தேசம் 

ஊழல் நாற்றத்தில் இருந்து விடுதலை பெரும் .

 

One Comment

  • malar

    இது எல்லாம் நடந்தா இந்தியா எப்பவே முதலிடத்தில் வந்திருக்கும்…
    நன்றி,
    மலர்

Leave a Reply