நோய் கூறும் நாடி துடிப்பு ..!
உடலில் ஏற்படும் இதயத்தின்துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களி
ல் நன்கு உணரமுடியும். அதிலும் நிறை ய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டி ல் மட்டும்தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அத்துடிப்பை கழுத்து, கால்களில்கூட உணர முடியும் . இப்போது உடலில் உள்ள நாடித் துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாக வோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த் தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலு ம், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள்
முதலில் அத்துடிப் பை பார்த்துதான் மற்ற முடிவுகளை எடுப் பார்கள். மேலும் யாரேனும் உயிருட ன் இருக்கிறார்களா, இல்லையா என் பதையும் அந்நாடித் துடிப்பை வைத் துதான் முடி வெடுப்பார்கள்.
ஒருவருக்கு சரியான நாடி துடிப்பு எ ன்றால் எவ்வளவு?
ஒரு ஆரோக்கியமான இளைஞனுக் கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக் கும். ஆனால் அந்த துடிப்பு, பாலினம், வாழ்க்கை முறையை பொறு த்து மாறுபடும். உதாரணமாக, ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவ ர்களுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60வரை துடிக்கும். அதுமட்டுமல் லாமல், கைக்குழந்தைகளுக்கு அதிகமாக 100 முதல் 160 வரையில்
துடிக்கும். சிறு குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை துடிக்கும். அதுவே சற்று பெரிய குழந்தைகள் என்றால் 70முதல் 80வரை துடிக்கும். ஆனால் இயற்கையாகவே சாப்பிடும்போது, உடற்பயிற்சி செய்யும்போதெல்லாம் நாடித்துடிப்புகள் அதிகரிக்கும்.
நாடித்துடிப்புகள் எதற்கெல்லாம் அதிகமாகும்?
*அதிகமான எடை இருந்தால் உட லில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் உடலில் அதிகளவு கொ ழுப்புக்கள் சேர்வதால், இதய த்திற்கு அதிகளவு அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியாக மூச்சுவிட முடியாத அளவுபோ
ய் விடு ம். அதனால்தான் குண்டாக இரு ப்பவர்களுக்கு விரைவில் இதய நோய் வந்துவிடுகிறது.
*கர்ப்பமாக இருக்கும்பெண்களு க்கு நாடித்துடிப்புகள் ஒரு நிமிட த்திற்கு 150 துடிப்புகள் ஏற்படும். பழைய காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று அறி ய எந்த ஒரு டெஸ்ட்களும் இருக்காது. அப்போது அவர்கள் நாடித் துடிப்பை வைத்துதான் கர்ப்பத்தை அறிவார்கள். ஏனெனில் அந்நேர
த்தில் உடலில் உள்ள இரத்தத் தின் அளவு அதிகரிக்கும். மேலும் இத யம் உடல் முழுவதும் இரத்தத் தை செலுத்துவதற்கு சற்று கடினமாக வேலை செய்யும். இது மிகவும் சாதாரணமானதுதான். இருப்பினு ம் கர்ப்பமாக இருக்கும்போது இர த்த அழுத்தத்தை அறியவேண்டும்.
*உடலில் இரத்தஅழுத்தம் அதிக மாக இருந்தால், மருத்துவர்கள் புகை பிடிப்பதை நிறுத்த சொல்வார்கள். ஏனெனில் அதில் இருக்கும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை, இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடலில் சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தம், இதைப் பிடிப்பதால், நாடித்துடிப்புகள் மிகவு ம் அதிகரிக்கும்.
எனவே உங்கள் நாடித்துடிப்புகளை அறிந்து கொண்டு, உடலை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி – அமானுஷ்யம்