சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்
எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது தொடர்பா
க 30 பேர் கைது செய்யப் பட்டிரு ப்பதாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப் பட்டுள்ளது. தடியடியை கண்டித்து பொது மக்கள் தொட ர்ந்து போராட்டம் நடத்தி வருகி ன்றனர்.

இதற்கிடையே போராட்டக் குழு ஒருங்கிணை ப்பாளரான உதய குமார், முக்கிய தலைவர் ஒருவ ர் முன்னிலையில் இன்று கூட ங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையப்போவதாக கூறினார். ஆனால் பொது மக்களோ, அவ ரை சரணடைய விட மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில், ஊழ லுக்கு எதிராக போராடி வருபவரும், சமூக ஆர்வலருமான அரவிந்த் கெஜ் ரிவால் இன்று இரவு இடிந்தகரை வந்தடைந்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘உச்சநீதிமன்றம் விதி த்த கட்டுப்பாடுகளை அணு உலை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை. அதையும்மீறி அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளரான உதயகுமா ர், போலீசில் சரணடைவதற்காக கூடங்குளம் வந்ததாகவும், போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ள அணுஉலை எதிர்ப்பாளர்களான மக்கள், உத யகுமார் சரண் அடைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை படகில் ஏற்றி திருப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (news in malaimalar)