Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தடுமாற்ற‍த்தால் தடம் மாறும் வைகைப்புயல் !

நிமிடத்துக்கு இத்தனை ஆயிரம் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. ஒரு படத்தின் ஹீரோவிற்கு இணையான சம்பளம் பெற்ற காமெ டியன். விஜயகாந்த்துக்கும், இவருக் கும் பக்கத்து பக்கத்து வீடு. விஜய காந்த் தொண்டர்களுக்கும் இவருக் கும் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு ஊடல்கள் பெரும் பகையாக மாறி, காவல் நிலையம் நீதிமன்றம் வரை சென்றது.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அப் போதைய தி.மு.க அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந் துக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க விஜயகாந்துக்கும், வடிவேலுவு க்கும் இருந்த பகையை தி.மு.க சாணக்கியத்தனமாக பயன்படுத்திக் கொண்டது. ஒருபெரும் தொ கையைகொடுத்து விஜயகாந்துக்கு எதிராக வடிவேலுவை பிரச்சா ரத்தில் இறக்கிவிட்டது தி.மு.க. அடுத்தும் தி.மு.கதான் ஆட்சிக்கு வரும் என்று நம்பிய வடிவே லு தி.மு.கவின் இந்த வலை யில் விழுந்தார். விஜயகாந்த் தை மிக மோசமான வார்த் தைகளால் திட்டி பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் முடிவு மாறிப்போன தும் கலங்கிப்போனார் வடி வேலு. அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் நின்றுபோனது. அ.தி.மு.க. வோ, முதல்வர் ஜெயலலிதாவோ வடிவேலுக்கு யாரும் படம் தரக் கூடாது என்று சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் முத ல்வர் ஜெய லலிதாவுக்கு வடிவேலு பற்றி நினைத்துப் பார்க்ககூட நேரம் இல்லை. ஆனாலும் வடிவேலுவை வை த்து படம் எடுத்தால் ஏதாவது பிரச்னை வருமோ என்று தாங் களாகவே பயந்து கொண்ட தயாரிப்பாளர் கள் அவரை அணுகவில்லை. அதோடு வடி வேலுவின் சம்பளம் இமயமலை அளவு உயர்ந்து இருப்பதால் சிறு தயாரிப்பாளர் கள் அவரை நெருங்க முடியாது. அவர் நடி த்து சமீபத்தில் வெளி வந்த படம் மறுபடியு ம் ஒரு காதல். இந்த படத்துக்கு  படத்துக்கு அரசோ, அ.தி.மு.க.வோ எந்த இடையூறும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா வாய்ப்பு இல்லாததால் மதுரையி ல் சொந்த வீடு கட்டும் பணியில் பிசியாக இருந்தார். இப்போது அது வும் முடிந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் பார்ட்& 2 எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் வடிவேலு. இதற்காக அவர் இயக் குனர் சிம்புதேவனோடு ஆலோசனை நடத்தி வருகிறார். கிட்டத் தட்ட திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டது. இந்நிலை யில் சமீபத்தில் எம்.எஸ். விசுநாதன், ராமமூர்த்திக்கு நடந்த பாரா ட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண் டார். இதற்கு வடிவேலுவுக் கும் அழைப்பு வந்தது. இதை வடிவேலு சற்றும் எதிர்பார் க்கவில்லை. ஜெயலலிதாவை பார்த்து பய ந்து கொண்டிருந்த வடிவே லுவுக்கு அவ மீது பக்தி வர ஆரம்பித்து விட்டது. ஆனாலு ம் விழாவுக்கு செல்லவில்லை. காரணம் ஜெயலலிதா பெருந்தன் மையுடன் நடந்து கொண்டாலும் கட்சிகாரர்கள் கலாட்டா செய்துவி டுவார்களோ என்ற பயந்துகொ ண்டு செல்லவில்லை.

முதல்வர் ஜெயலலிதா நமக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டார் என்பதை வடிவேலு இப்போது தெளிவாக புரிந்து கொண்டார். இத னால் அம்மாவிடம் சரண்டர் ஆக தயாராகிக் கொண்டிருக்கிறார். இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகம் பலகோடி செலவில் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளர் யாரே னும் தயாரிக்க முன்வராவிட்டால் சொந்தமாக தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் வடிவேலு. இந்த நி லையில் அம்மாவின் ஆசி தனக்கு கண்டிப்பாக தேவை என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால் இப் போது வெளிப்படையாக அம்மா வை புகழ்ந்தும், மறைமுகமாக அய்யாவை திட்டியும் பேச ஆரம்பி த்திருக்கிறார். (dinamalar)

3 Comments

  • malar

    அரசியல் வேறு….சினிமா வேறு என்று இப்போதாவது புரிகிறதா…..
    நன்றி,
    மலர்

  • வைகை புயலின் பிரச்னையை நதி மூலம் ரிஷி மூலம் பார்த்தால் வேறு எங்கோ சிக்கல் இருக்கும் போல விஜய்காந்த்.வடிவேலு பிரச்னையோ அல்லது அதிமுக வடிவேலு பிரச்னையோ அல்ல வடிவேலு வேறு எங்கோ லாக் ஆகி உள்ளார்.அதில் இருந்த அவரால் வெளி வர இயலாது.மதுரையையும் வடிவேலுவையும் கடந்த ஆட்சியையும் இணைத்து ஒரு லிங்க் போட்டு கால்குலேசன் பண்ணுங்கள்.பல ஆச்சரியங்கள் புரியும்.

Leave a Reply