Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரியார் பெருமைகள்

பெரியாரின் கேள்வி நேரம்

அப்போவெல்லாம் ஐயா பேசற கூட்டங்கள்லே,கேள்வி-பதில் நிக ழ்ச்சி கண்டிப்பா இருக்கும். எந்த கக்ஷ்ட மான கேள்விக்கும் அப்பவே ஐயா அரு மையான பதில் சொல்வாரு.

அந்த கேள்விக்கு பதில்களை யாரவது தொகுத்திருந்தா இன்னைக் கு அதை ஒரு அருமையான புத்தகமா வெளியிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும்.

அன்னைக்கு காரைக்குடி கூட்டத்திலேயு ம் அது மாதிரி கேள்வித் தாளைத்தான் ஐயாகிட்டே கொடுக்கிறாங்கனு நெனச்சு க்கிட்டு நாங்க எல்லாம் பேசாம இருந்து ட்டோம்.வழக்கமா ஐயா முதல்லே மைக் லே அக்கேள்வியை படிச்சுட்டு அப்புறம் தன்னோட பதிலை சொல்வார். ஆனா அன்னைக்கு அந்த தாளை படி ச்சுட்டு ஒன்னும் சொல்லாம பக்கதிலே இருந்த அண்ணாக்கிட்டே அதைக் கொடுத்திட்டார். அண்ணா படிச்சு பார்த்ததும் லேசா சிரிச்சுட்டே மைக்குக்கு வந்து பொது மக்களை பார்த்து,

‘இங்கே யாரோ ஒரு தாள்லே தன்னோட பெயரை மட்டும் எழுதிட்டு கேள்வியை எழுத மறந்திட்டாரு. ஆகையினால் அந்த தாளை நம்ம இராம.சுப்பையாவிடம் கொடுக்கிறேன், அவர் அதை உங்களிடம் கொண்டு வருவார்.அது யா ரோட பேரோ அவங்க மேடைக்கு வந்து மீண்டும் தங்கள் கேள்விகளை கொடுக்கலாம்னு சொல் லிவிட்டு அதை எங்கிட்ட தந்தார்.அந்த தாள்லே “நான் ஒரு முட்டாள்னு” எழு தியிருந்தது.

இதை கேள்வினு நினைச்சுக்கிட்டு பெரியார் மைக்கிலே படிப்பார்ங் கிற நோக்கத்திலே யார் அதை கொண்டு வந்து கொடுத்தானோ அவனே அன்னைக்கு பெரிய முட்டாள் ஆயிட்டான். அண் ணாவோட குறும்பும் புத்திசாலிதனமும் ஐயா வையே ஆச்சிர்யப்பட வைச்சுடுச்சு . இப்படி அனு பவத்தை சொல்கிறார் இராம.சுப்பையா
**

பெரியாரின் பன்பு

இடுக்காட்டில் இராஜாஜியின் இறுதி சடங்குக  ல் கலந்து கொள்ள குடியரசு தலைவர் வி.வி.கிரி வந்தருந்தார். சுடு காட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். பெரியார் அவர்கள் அருகில் ஒரு சக்கர-நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தார். அந்த நிலையிலும், பெரியார் என்னையும் விடுதலை சம்பந்தத் தையும் அருகில் அழைத்து “என்னை இறக்கி கீழே உட்கார வையுங் கள், கிரியை இந்த வண்டியில் உட்கார சொல்லுங்க ள். அவர் குடியரசு தலைவர்.அவர் நிற் கும்போது நாம் அமர்ந்திருப்பது மரி யாதையாக இல்லை, என் றார்.

ஜனாதிபதி கிரியிடம் இதை தெரிவித்த போது பெரியாரின் பண்பைக் கண்டு பெரிதும் வியந்து போனார். என்கிறார் முன்னால் அமைச்சர் ராசாராம்.

எழுந்து நிற்கமுடியாத அந்த தள்ளாத வயதிலும் குடியரசு தலைவரின் பதவி க்கு மரியாதை கொடுத்த பெரியாரின் இந்த பண்பு. ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை நிற்க வைத்து விட்டு தாம் மட்டும் உட்கார்ந்து கொண்டு பேசிய பெரியவாள் சின்ன வாள்களுக்குத்தெரியுமா?
**

1929 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு சொற்பொழிவுக்காக நானும் பெரியாரும் சென்றிருந் தோம். எதிர்ப்பாளர்கள் அன்றை ய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக எதிர்ப்பு நோட்டீ சுகள் சில போட்டிருந்தார்கள். அதில் ”பெரியார் புராணங்களை யெல்லாம் பொய் என்று சொன் னவர்.நாத்திகர்.அவரை இன்று பேசவிடக்கூடாது“ என்றிருந்த து.

கூட்டம் மாலை 6 மணிக்கு.ஆனால் 6.30 ஆகியும் கூட்டத்திற்கு ஏற் பாடு செய்தவர்களும் எங்களை அழைத்தவர்களும் வரவில்லை. ”பேசாமல் திரும்பி போய்விடுவது நல்லது”என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்க்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன் னார்.

வண்டியில் அமர்ந்ததும் பெரியார் வண்டி காரணிடம் கூட்டம் நடக்கும் இடத்தின் வழியாக இரயிலடிக்கு போகும்படி சொன் னார். அந்த இடம் வந்ததும் பெரியார் பார் த்தார். சுமார் 500 பேர்கள் அங்கு கூடியிரு ந்தனர்.மேடையில் நாற்காலி எதுவுமில்லை. எங்களை வரவழை த்த ஆட்களும் இல்லை.

உடனே பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்லி தனியாகவே போய் மேடையில் ஏறினார்.

“பொது மக்களே நான் உங்க ள்முன் இப்போது பேச வரவி ல்லை. ஒரு உண்மையைச் சொல்லிபோகவே வந்தேன்.

புராணங்களை பொய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டி ருக்கிறார்கள்.அது நான் சொல்லவில்லை. சைவ புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்க ளையெல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராண ங்களுமே பொய்யாக இருக்கு மோ என்று நான் எண்ணியதுண்டு.ஆக புராணங்க ளை பொய் என்று சொன்னவர்கள் சைவ-வைணவப் பண்டிதர்கள் தான் இதை சொல்லி போக தான் வந்தேன். என் மேல்பழி போடாதீர்க ள்.”என்று பெரியார் சொன்னதும் ஓயா மல் கை தட்டி மக்கள் ஆரவாரம் செய் தார்கள். அங்கு தொடர்ந்து ஒன்றரை மணிநே ரம் பெரியார் பேசினார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

சொன்னவர் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்.
**
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

1970ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரைவையில் மாகா ண மந்திரியாக இருந்தவர் டாக் டர் சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுபாடு சம்ப ந்தமான ஆராய்ச்சியாளர் அவர்.

வேலூரைச் சேர்ந்த அவர் பெரி யாருக்கு நெருக்கமானவர்.அவர் பெரியாரை சந்தித்து மக்கள் தொ கையை கட்டுபடுத்தவே முடிய வில்லை. ஆண் குழந்தை வேண் டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்ய லாம் ?”என்றார்.

“பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித் து விடுங்கள். சரியாகிவிடும்” என் றார் பெரியார்.

கேட்டவருக்கு புரியவில்லை .பெரி யார் விளக்கி சொன்னார்.

”உன் மனைவிக்கும் வேலை உன் மகளுக்கும் வேலை, அவர்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற நிலை வந் தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிடமாட்டார்.ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்து போய் விடு ம்” என்றார் பெரியார்.

ஆச்சிர்யப்பச்சு போனார் அந்த அறிஞர்.

“உலகத்தில் வேறு யாரும் சொல்லாத உங்களின் ஒரிஜினல் ஆலோ சனை இது” என்று கூறினார் அந்த அறிஙர்.எனவே அவரை (பெரி யாரைப் பிற்போக்குவாதி என்பதும். அவரு டைய கருத்துக்களால் வீழ்ச்சியடைந்தோ ம் இன்பதும் நேர்மையான குற்றச்சாட்டாக தெரியவில்லை.”

என்கிறார் சிந்தனையாளன் ஆசிரியர் தோ ழர் வே. ஆனைமுத்து.

தககல் :
பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள்
தொகுப்பு:சபிதா ஜோசப்
நக்கீரன் வெளியீடு

Leave a Reply