Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு..7வது சிலிண்டர் முதல் விலை ரூ.733.50

இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ. 386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலி ண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இக்கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு  வருகி றது.

பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, அரசியல் விவகார ங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் டீசல் விலை யை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதேபோல சமையல் கேசுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கேஸ் விலையை மத்திய அரசு உயர்த் தா விட்டாலும், அதன் சப்ளையி ல் மத்திய அரசு புதிய கட்டுப்பா ட்டை கொ ண்டு வந்துள்ளது.

இப்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஒரு கேஸ் சிலிண்டரின் உண்மையான வி லை ரூ.733.50 ஆகும். ஆனால், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக் கும் மத்திய அரசு ரூ.347 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதனா ல் நமக்கு சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மானியத்தை ஒரு வருடத்துக்கு முதல் 6சிலிண் டர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து ள்ளது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மக்கள் உண் மையான விலையைத்தர வேண்டு ம்.

இதனால் இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண் டர்கள் மட்டுமே வழங்கப்படும். இதையடுத்து வாங்கப்படும் ஒவ் வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக் கும்.

இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

சந்தை விலையான ரூ.733. 50 கொடுத்து ஆண்டுக்கு எத் தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலு ம் வாங்கிக்கொள்ளலாம். இதற் கு உச்சவரம்போ, கட்டுப்பாடோ நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தக் கட்டுப்பாட்டால் வருடத்துக்கு 6 சிலிண்டர்களுக்குள் பயன்ப டுத்துபவர்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் அதற்கு மேல் பயன் படுத்துபவர்கள் கிட்டத்தட்ட இருமடங்கு விலை கொடுத்துதான் ஒவ் வொரு கூடுதல் சிலிண்டரையும் வாங்கவேண்டிய நிலை உருவாகி யுள்ளது. {Nagoorkani Kader Mohideen Basha (fb)}

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: