இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு அருகே மென்டாவை தீவில் இன்று காலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோ லில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கும் கடலுக் கடியில் சுமார் 25 கி.மீட்டர் ஆழத்தில் ஏற் பட்டதாக தெரிகிறது. பெங்குலு எ ன்ற நகரத்திற்கு வடமேற்கே சுமார் 190 கி.மீட்டர் தூரத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் காரண மாக சுனாமி எச்சரிக்கை ஏதும் அங்கு விடுக்கப்படவில்லை, உயிர் சேதம் பற்றியவிவரங்களோ அல்லது பொருட்சேதம் குறித்த விவர ங்களோ வெளி யாகவில்லை.