Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மொபைல் போன் பேட்டரி பராமரிப்பு

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற் படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கு காணலாம்.

 

மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட் டரிகளையே பயன்படுத்த வேண்டும். போனின் சார்ஜரும், போனைத் தயா ரித்து வழங்கும் நிறுவனத்தின் சார்ஜ ராகவே இருக்க வேண்டும்.

அதிக வெப்பம் உள்ள இடம் அருகே யும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்தினை வரவழைக்கும்.

பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன்மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வை த்திருக்கக் கூடாது.

ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல்தரும் நிலைகளாகும்.

பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடு ம் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக்கூடாது. இதனால் சூடு போனின் மற்ற பகுதிகளுக்குப் பரவும் வாய்ப்பு ஏற்ப டும்.

பேட்டரிகளை அதிகநேரம் தொட ர்ந்து சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும். 

தொடர்ந்து மியூசிக் அல்லது வீடி யோ பார்க்கும் சூழ்நிலையில் பே ட்டரி சூடு அடைகிறது எனத் தெரி ந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது. 

பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக்கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.பேட்டரி பராமரிப்பு.

இணையத்தில் இருந்ததை இதமுடனே பகிர்கின்றோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: