‘இரண்டாம் உலகம்’ படக்குழுவினர் 80 பேருக்கு மது விருந்து அளித் து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனுஷ்கா. ஜார்ஜியாவில் இந்த விருந்து நடந்துள்ளது.
‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா நாயக னாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கி ன்றனர். செல்வராகவன் இயக்குகிறார். இத ன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப் பாக நடந்தது. இறுதியாக ஜார்ஜியாவில் பட ப்பிடிப்பு நடந்து முடிந்தது.
படப்பிடிப்பு கடைசி நாளில் அனுஷ்கா தன் சொந்த செலவில் இந்த விருந்தை நடத்தினார். ஜார்ஜியாவில் உள்ள ஒயின் வகைகள் பிர பலமானவையாகும். 80 பேருக்கும் பெட்டி பெட்டியாக ஒயினை வரவழைத்து குடிக்க வைத்தார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.
அதன் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுஷ் கா 80 பேருக்கு மது விருந்து அளித்திருப் பது அதிர்ச்சி யளிக்கிறது. படக்குழுவினரு க்கும் வேறு ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து இருக்கலாம். மது விரு ந்து என்பது பண்பாட்டுக்கு விரோதமான து.
இதன்மூலம் அன்னிய கலாச்சாரத்தோடு ஒன்றி இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியில் இறங்கியுள் ளார். அனுஷ்கா யோகா ஆசிரியை என்கின்றனர். யோகாவில் இதை த்தான் கற்றாரா? என்று புரியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். malaimalar