அன்புள்ள சகோதரிக்கு—
என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை.
பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள்.
இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் மனைவியும் அவரும், தினசரி போ னில் பேசிக் கொள்கின்றனர்.
இத்தொடர்பை விட்டு விடும்படி என் மனைவியை கண்டிப்பதா, வே ண்டாமா? எனக்கு துரோகம் செய்யவில்லை என கூறுகிறாள். என் ன செய்வது?
— இப்படிக்கு
அன்பு சகோதரன்.
அன்புள்ள சகோதரருக்கு —
கடிதத்தில் உங்கள் குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. நீங்கள் என்ன பணியில் இருந்து ஓய்வு பெற்றீர்கள், உங்கள் மனை வி இல்லத்தரசியா அல்லது பணிபுரிகிறாரா போன்ற விவரங்களை யும் தெரிவிக்க வில்லை. ஆனால், உங்கள் குடும்பம், பொருளா தாரத்தில் மிக மிக பின்தங்கிய குடும்பம் என உணர்கிறேன்.
உங்கள் வீட்டில், ஐந்து வருடங்கள் தங்கி சாப்பிட்ட நபர், தொடர்ந்து பண உதவி செய்து வந்திருக்கிறார். அவருடைய நிர்பந்தம் காரண மாகவோ அல்லது அவரின் உதவிகளுக்கு நன்றிகடனாகவோ, உங் கள் மனைவி, அந்த நபருடன் கள்ளத்தொடர்பு கொண்டிருக்கக் கூடும்.
“அந்த நபர், உடல் கோளாறு காரணமாக திருமணம் செய்து கொள் ளவில்லை. அவர், “அந்த’ உறவுக்கு தகுதியானவர் அல்ல…’ என்ற, உங்கள் மனைவியின் கூற்று, பொய் என்று நம்புகிறேன். அப்படி இல் லாமல், மெய்யாலுமே அந்த நண்பர் ஆண்மையற்றவர் என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், உங்கள் மனைவி, பிற நபரை கட்டியணைத்து முத்தமிட்டது, நடத்தை கெட்ட செயலே. அதை, உங்கள் மனைவி நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல் ல.
ஐந்து வருடம் தங்கியிருந்த நபர், பின் என்ன காரணத்திற்காக உங் கள் வீட்டை விட்டு வெளியேறினார்? உங்கள் மனைவியின் கள்ளத் தொடர்பு பற்றிய உண்மை, 15 வருடங்களுக்கு பின், தற்சமயம் தான் தெரியும் என கூறியிருக்கிறீர்கள்; எப்படி தெரிந்து கொண்டீர்கள்? உங்கள் மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தாரா? போன்ற கேள் விகளுக்கு, உங்கள் கடிதத்தில் பதில் இல்லை.
தற்சமயம், உங்கள் மனைவியும், அந்த நபரும் தினசரி தொலைபே சியில் காதல் வசனம் பரிமாறிக் கொள்கின்றனர் என்கிறீர்கள். எனக் கொரு சந்தேகம்…
அந்த நபர், உங்கள் வீட்டில் ஐந்து வருடம் தங்கியிருந்து, சாப்பிட்டு உங்கள் மனைவியுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது, உங்களு க்கு அரசல் புரசலாய் தெரிந்திருக்கிறது. அந்த நபரின் பண உதவி களுக்காக, அந்த கள்ள உறவை சகித்திருந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவியின் சமாதானம், நொண்டி சமாதானம் என தெரிந்தும், அதை உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
நீங்கள், வேலைக்கு செல்லாத, பொறுப்பற்ற கணவராய் இருந்தீ ர்களோ என சந்தேகிக்கிறேன். உங்கள் பலவீனம் தான், உங்கள் மனை வியின் பலம்.
உங்கள் கடித கடைசியில், சில கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.
மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதா, வேண்டாமா? என்பது முதல் கேள்வி. உங்கள் கேள்வியை, பொது அறிவிப்பாய் வெளியி ட்டு, மக்களிடம் அபிப்ராயம் கேட்போமா? நீங்கள் அப்பாவியா அல் லது அப்பாவி போல் நடிப்பவரா? பல வருடங்களாக நடந்த தவறு க்கு, ஒரு மவுன பார்வையாளராக இருந்துவிட்டு, இப்போது ஒரு ஒப்புக்கு கேள்வி கேட்கிறீர்கள் என்று @தான்றுகிறது.
உங்கள் மனைவி, உங்கள் மீது வைத்திருப்பதாக சொல்லும் பாசம், வெறும் வெளி வேஷம். அவர் உங்களுக்கு துரோகம் செய்யவில் லை எனக் கூறுவது, சோற்றில் மறைத்த முழுப் பூசணிக்காய்.
மனைவி விஷயத்தில், என்ன செய்வது என்பது, உங்கள் இறுதி கேள்வி. உங்கள் பக்கம் கொஞ்சமாவது உண்மை இருந்தால், உங் கள் மனைவியின் கள்ளத்தொடர்பை தயவு தாட்சண்யமில்லாமல், கத்தரித்து விடுங்கள். அந்த நபர் செய்யும் பண உதவிகளை ஏற்காதீ ர்.
அவருடனான பழக்கத்தை முழுவதுமாக கத்தரித்துக் கொள்ள உங்கள் மனைவிக்கு கண்டிப்பான உத்தரவிடுங்கள்.
மொத்தத்தில், ஒரு குடும்பத் தலைவனுக்குள்ள பொறுப்புகளுடன் நடந்து, மீதமிருக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்குங்க ள் சகோதரரே!