தமிழ் சினிமாவை காப்பாற்ற அவ்வப்போது சில அவதாரங்கள் தோ ன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் வரிசையில் வந்தவர் தான் அக்குபன்ஞ்சர் டாக்டர் சீனிவாச ன். அண்ணா நகரில் சிறிய அளவில் அக்குபன்ஞ்சர் மருத்துவ மனை வைத் திருக்கும் அவருக்கு சினிமாவில் நடி க்க ஆசை வந்தது. சிறுசிறு வேடங்களி ல் நடிக்க ஆரம்பித்தார். நீதானா அவன், உனக்காக ஒரு கவிதை, ரா ரா பழனிச் சாமி, மண்டபம், சுரங்க பாதை, இப்படி சில படங்களில் நடித்தார்.
புதிய இயக்குனர்கள் அவரை தேடிப் தே டிப்போய் வாய்ப்பு கொடுத் ததற்கு கார ணம் அந்த இயக்குனர்களுக்கு அவர் கொடுக்கும் கட்டிங் பணம். சிறிய சம்ப ளத்தில் படம் இயக்கும் அறி முக இயக்குனர்களுக்கு இது ஒரு உபரி வருமானமாக இருந்தால் அவரை ஆர்வத்தோடு தங்கள் படத்தில் தலைகாட்ட வைத்தனர். திடீ ரென ஒருநாள் அவருக்கும் படம் தயாரிக் கும் ஆசை வந்தது. அந்த ஆசையை சரியாக பய ன்படுத்திக் கொண்டார் சண்டை இயக்குன ர் பன்ஞ் பரத். சினிமா இயக்கம் பற்றி அரிச் சுவடிகூட தெரியாத அவர் எடுத்த படம் தான் இந்திர சேனா. இதில் சீனிவாசன் வில்ல னாக நடித்தார். அடுத்து ஒருவர் இயக்கத் தில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார். இதில் இயக்குன ருக்கும், இவருக்கும் பண விஷயத்தில் முட்டல் மோதல் வர முடிந்த படத்துக்கு இவரே கதை, திரைக்கதை வச னம், இயக்குனர் ஆனார். ஹீரோவும் அவர் தான். அவருக்கு ஜோடி யாக மீனாட்சி கைலாஷ் என்ற பெண் துணிச் சலுடன் நடித்தார். பெரி யார், அண்ணா எம்.ஜி. ஆருக்கு பிறகு இவர் தான் அடுத்த தலைவர் என்கிற ரேன்ஞ்சுக்கு ஓப்பன் சாங்குடன் மிர
ட்டியது அப்படம். 50 வயதான அக்குபன்ஞ்சர் சீனிவாசனின் ஹீ ரோ கனவு நிறைவே றியது.
ஒரு அக்கு பன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோ டிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க முடிகிறது என்று எந்த சினிமா கலைஞனு ம் யோசிக்கவில்லை. பலர் அவரின் அண் ணா நகர் கிளினிக்கிற்கு தேடிச் சென்று, காத்திருந்து அவரது நண்பர்கள் ஆனார்க ள். அதில் சிலமுக்கிய நடிகைகளும் உண் டு. கையில் கதையை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிச்செல்லும் புதிய இயக்குனர் கள் தங்கள் கனவு கதையை ஒதுக்கி வை த்துவிட்டு சீனிவாசனுக்கு கதை எழுதிக் கொண்டு சென்று அவரைப்பார்த்தார்கள். அப்படி தேடிச்சென்று கதை சொல்பவர்களுக்கு ஒரு நண்மை உண் டு. சீனிவாசனுக்கு கதை பிடி க்காவிட்டாலும் பெரும் தொ கை சன்மானமாக கிடைக்கு ம். இதற்காக வாரம்ஒரு கதை சொன்ன இயக்குனர்களும் உண்டு.
அப்படிச் சென்றவர்கள் ஆளா ளுக்கு ஒரு பட்டத்தை சீனி வாசனுக்கு சூட்டி மகிழ்ந்தார் கள். அதில் அவருக்க பிடித்த பவர் ஸ்டார் பட்டத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டார். (தெலுங்கில் பவன் கல்யாணின் பட்டம் அது) லத்திகாக படம் எல்லா தியேட்டர் களிலும் ஒரு காட்சி ஓடிவிட்டு பத்திரமாக திரும்பி வந்தது. ஆனா லும் விடுவாரா பவர் ஸ்டார், சென் னை கமலா தியேட்டரில் அந்தப் படத்தை திரையிட்டு 150 நாட்கள் ஓட்டினார். அதாவது அப்படம கா லைக் காட்சியாக ஓடும். பல நாட்க ள் வெறும்தியேட்டரில் படம் ஒடும். சில நாள் படம் பார்க்க வருகிறவர் களுக்கு பிரியாணி வழங்கப்படும், அனைத்து நாளும் இலவச அனுமதிதான். தியேட்டரின் வாசலில் தன து ஆளுயர கட்அவுட் வைப் பதற்கும், படம் திரையிடுவதற்கும் வாட கை கொடுத்து விடுவார். விஜய், அஜீத் படங்களே கமலா தியேட்ட ரில் சில நாட்களில் காணா
மல் போகும் நிலையில் பவர் ஸ்டார் மட்டும் நிலைத் து நின்று சிரித்துக் கொண்டிருந்தார். இதில் இன்னொரு கொடுமை என்ன வெ ன்றால் சில பத்திரிகைகள் லத்திகா பட த்தை ஆண்டு கண் ணோட்டத்தில் அதிக நாள் ஓடிய படங்களின் பட்டியலில் சேர் த்து மகிழ்ந்துது.
தன் வழுக்கை தலைவில் விதவிதமான விக் வைத்துக் கொண்டு அவர் கொடுத் த போஸ்கள் கோடம்பாக்க ரோடுகளில் விதவிதமாக சிரித்துக்கொண்டிருந்தன . அடுத்து திருமா, தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு படத்தை தானே தயாரித் து இயக்கப்போவதாக அறி வித்தார். அதில் ஒரு படத்தில் மாஜி ஹீ ரோயின் வாணி வி ஸ்வநாத் அவருக்கு ஹீரோ யின். பவர் ஸ்டாரின் “அன்பான” உபசரிப்பின் கார ணமாக சில மீடியா க்களும் பவர் ஸ்டா ரை தூக்கி வைத்துக்கொண்டாடியது. சில முன்னணி வார இதழ்கள்கூட அவ ரை கிண்டல் செய்வதாக காட்டிக் கொ ண்டு அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி யை அள்ளி வீசியது. முன்னணி சேனல் கள் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தி யது. சிறப்பு பேட்டி கண்டது. நல்ல திற மையோடும், எதிர்கால கனவுகளோடு ம் சினிமாவை உயிராக நேசித்துக் கொ ண்டு கோடம்பாக் கத்தின் தெருக்களி ல் உலாவிக் கொண்டிருக்கும் இளைஞர்க ளின் மனதில் இந்த காட் சிகள் எத்தனை வலியை உண்டாக்கி இருக்கும் என்பது அவர்களுக் குத்தான் தெரியும்.
அடுத்த அதிர்ச்சியை அள்ளி வீசினார் பவர் ஸ்டார். ஷங்கரின் ஐ பட த்திலும், பாலாவின் பரதேசி படத்திலும் அவர் நடிப்பதாக அறிவித் தார். இந்த இருவர் படத்திலும் ஒரு காட்சியில் தலைகாட்டினால் போதும் என்று லட்சம் திறமையா ளர்கள் காத்திருக்க இந்த வாய்ப்பு பவர் ஸ்டாருக்கு போனது எப்படி என்பது இதுவரை புரியாத ஒன்று. அடுத்த அதிர்ச்சியை அளித்தவர் காமெடி சந்தானம். கண்ணா லட் டு தின்ன ஆசையா என்ற படத்தில் சந்தானத்துடன் நடிப்பதாக அறிவி ப்பு வந்தது. சிலர் பவர் ஸ்டார்தா ன் தயாரிப்பாளர் என்றார்கள். சிலர் சந்தானத்துடன் பார்டனர் என்றா ர்கள். இப்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
எப்படியோ பணம் மட்டும் இரு ந்தால் சினிமாவில் எந்த இடத் தையும் பிடிக்கலாம் என்பதற்கு பவர் ஸ்டார் ஒரு நல்ல உதார ணம். திறமை மட்டும் இருந்தா ல் கோடம்பாக்கத்துக் டீக்கடை யும், அங்கு கிடைக் கும் மசால் வடையும்தான் கடைசிவரை கிடைக்கும் என்பது மீண்டும் ஒருமு றை நிரூபணாமாகியிருக்கிறது.
அஜீத், விஜய்க்குகூட பெயரு க்கு முன்னால்தான் தல, இ ளைய தளபதி என்ற பட்டங்க ளை போடுவார்கள். ஆனால் சீனிவாசன் என்பதையே மற ந்து பவர்ஸ்டார் என்று மட்டு மே குறிப்பிடும் அளவிற்கு அவர் வளர்ந்ததற்கு மூன்று காரணங்கள் தான் உண்டு. அது 1.பணம், 2.பணம், 3.பணம்.
அண்ணாச்சி தன் பலசரக்கு கடையில் ஒரு பையனை வேலைக்கு சேர்ப்பதற்குகூட அவனது பின்ணியை தெரிந்து கொண்டுதான் சேர்த்துக் கொள்வார். ஆனால் ஒரு அக்குபன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கான பணத்துடன் விளையாட முடிகிறது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சினிமா அவரை கிண்டல் என்கிற பெயரில் கொ ண்டாட ஆரம்பித்தது. அவரும் அந்த நெகட்டிவ் பப்ளிசி ட்டியை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொ ண்டு சினிமா உலகத்தையே கேலிசெய்துவிட்டார். சினிமா ஒருகடல் அதில் யார் வேண்டுமானாலும் குதித்து, குளித்து விளையாடலாம், யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக்கூ
டும். ஆனால் அப்படி குதித்தவரோடு சினி மாவில் மதிப்பு மிக்கவர்களும் உட ன் விளையாடினார்களே அது ஏன் என்பதுதான் சராசரி ரசிகனின் கேள் வி.
எல்லாவற்றையும் கவனித்துக் கொ ண்டிருக்கும் காலம் ஒரு நாள் எல் லாவற்றுக்கும் பதில் சொல்லத்தானே செய்யும். என்னதான் வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையத்தானே செய்யும். அது இப்போ து ஆரம்பித்திருக்கிறது. அக்குபன்ஞ்சர் சீனிவாசனுக்கு பணம் எப்படி வந்தது, எந்த வழியில் வந்தது என்பதை நாம் சொல்லத்தேவையில் லை. அதை இனி காவல் துறை சொல்லும். குறைந்த வட்டிக்கு கடன் தருகிறேன். அட்வான்ஸ் கொடுங்கள் என்ற தொழிலில் 60 லட்சம் ரூபாய் மோசடி வழ க்கில் கைதாகி புழல் சிறையி ல் அடைக் கப்பட்டிருக்கிறார் சீனிவாசன். இன்னும் அவர்மீது பல வழக்குகள் பாயலாம். வழ க்கில் அவர் தண்டனை பெற லாம். அல்லது நிரபராதி என்று விடுதலையாகலாம். ஆனால் ஹீ ரோக்கள் நிறைந்த சினிமா வில் இரண்டு ஆண்டுகள் வெ ளிச்சத்துடன் வலம் வந்த சீனிவாசன் நிஜ ஹீரோவாகி ஒட்டுமொத்த சினிமா வையும் காமெடியாக்கி விட் டார் என்பதுதான் உண்மை.
news in dinamalar