நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்திலு ம் எம்.ஆர். ராதா, ஸ்ரீரஞ்சினி, எம்.என். ராஜம், எஸ்.எஸ். இராஜேந்தி ரன், சந்திரபாபு, ஆகியோரது சீரியநடிப்பி ல் 1954ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எம்.ஆர். ராதா அவர்களே செல்வதந்தராகவும், மேற்கத்திய கலாச்சார பிரியராகவும், நடி த்திருப்பார். கட்டிய மனைவியை விடுத் து, தாசியிடம் சென்று தமது சொத்துக்க ளையெல்லாம் இழந்து குஷ்ட நோயால் பாதிப்படைந்து, அதனால் வீட்டைவிட்டே வெளியேற்றப்படுவார். என்ன நடந்தது என்பது தான் கிளைமாக்ஸ்
குஷ்ட நோயாளியாக எம்.ஆர். ராதா அவ ர்கள் மிகவும் அருமையாக நடித்திருப்பார். எம்.என்.ராஜம் அவர்கள் காந்தா என்ற தாசி வேடத்தி ல் நடித்திருப் பார். இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.என். ரா ஜம்அவர்கள் மாடிப்படியில் நின் று கொண்டு, கீழிருக்கும் எம். ஆர்.ராதாவினை மார்பில் தனது காலால் எட்டி உதைப்பதாக கா ட்சி அமை க்கப்பட்டி ருந்தது.
ஆனால் எம்.என்.ராஜம் அவர்க ளோ இதற்குதுளியும் சம்மதிக்க வில்லை. தன்னைவிட வயதில் மூத்தவர் என்பதாலும், அவர் தாம் வைத்திருந்த உயரிய மரி யாதையாலும் இக்காட்சிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. பின்பு எம் .ஆர். ராதா அவர்கள், நீ என்னை எட்டி உடைத்தால் தான் காட்சி இன் னும் சிறப்பாக வரும் ஆகவே எனது மார்பில் கால்வைத்து எட்டி உதை என்று சொல்லியும், சிறியதாக கடிந்து கொண்டு சொல்லியிரு க்கிறார். பின்புதான் இக்காட்சியில் எம்.என். ராஜம் ஒப்புக் கொண்டு நடித்து முடித்தார்.