பாரதியார் காசியிலிருந்தபோது,சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டா ர். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்லம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார். அதற்கு பாரதியார் எழுதியகடிதம் என்ன தெரி யுமா?
என் அருமைக்காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத் தது. நீ எனது காரியங்களில் பயப்படும் படி யாக கவலை ப்படும் படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. நான் எப்போது ம் தவறான வழியில் நடப்பவன் அல்ல நீ இம்மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றா க படித்துவந்தாயானால், உனது கவலை தீரும். அவ்வாறு நீ செய்து வந்தால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன்!
இவ்வாறு எழுதி கையெழுத்திட்டு அனுப்பி னார் அந்த மஹாகவி பாரதியார்!
– என். கார்த்திகேயன், தேனி (நம் உரத்த சிந்தனை மாத இதழிற்காக)
தமது காதல் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் கூட, தான் தமிழ்மீது கொண்ட தீராத காதலையும் வெளிப்படுத்திய அந்த மஹா கவியின் பாதம்தொட்டு வணங்குகிறேன்.
விதை2விருட்சம்
Really because of these people only…still our language TAMIL rocking… Even i would like to write this in Tamil only…but in my system..am not having this option. But any way OUR TAMIL ROCKS ALWAYS.
உயர்ந்த உள்ளம்