கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங் கேற்ற இக்கலை விழாவில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை அமைப்புத் தலை வர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாண வ மாணவிகளுக்கு ஊட்டிய எச்ச ரிக்கை உணர்வு!
சமூக வலைத் தளங்களை கையா ளும்போது அதிக கவனமும், முன் னெச்சரிக்கை யோடும் செயல்படவேண்டும். அந்தரங்க தகவல்க ளை கணினி, மொபைல், சமூக வலை தளங்களில் பதிவேற்றுவ தை தவிர்க்க வேண்டும். கணினி, கைபேசிக ளை யாரிடமும் இரவல்தருவது நல்லதல்ல. வலை தளத்தில் பதிவாவது எதுவுமே அழியாது.
உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் தாயார் பிறந்த தேதி இரண்டு இருந்தாலே போதும், உங்களுடைய ஏ.டி.எம். கணக்கு, கடன் அட்டைச்செயல்பாடு ஆகிய வற்றை தவறான வழியில் சமூக விரோதிகள் பயன் படுத்தவோ, முட க்கவோமுடியும். அறிமுகமில்லாத குறுந் தகவல்கள், மெயில்களுக்கு நீங்கள் பதில ளிக்கவோ, திறந்து பார்க்கவோ செய்வது ஆபத்தில் முடியும். கணினியில் ENTER எனும் பொத்தான்தான் படுபயங்கரமானது.
புத்தி நுட்பத்தோடும், எச்சரிக்கை யோடும் ENTER பட்டனை கையாள வேண்டும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.