Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?

 

விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ -உ – ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லி ன் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக் கொண்டே கணபதியின் உருவை நினை த்துப்பாருங்கள்.

ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதா வது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந் திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள் ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான், சாணத்தி ல் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள் ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?

அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என் கிறார்கள். கணபதி என்ற பெய ருக்கு கண ங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்க ளின் அதிபதி எனலாம். உண்மை யில் கணம் என்றால் காலத்தின் அளவுகோல். அதனால் காலத் தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக் கூற லாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் – தடைகளை ஏற்படுத்து பவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைப டாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகி விடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.

ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையா ன முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம். கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக் கூடிய து அல்ல. அதை விவசாயம் செய்ய முடி யாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம் புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக் காது. ஆக வே சுயம்பு தாவரமான அருகம் புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூப மாகும்.

மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமை யான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற் று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக் னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட் டுகிறது!

பிள்ளையாருக்கு பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகி யோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிற து. பிரம்மா எனும் நிலை படை த்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்க ளை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இரு க்கக்கூடாது.

– Bala Chander (fb)

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: