டீசல்விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு கடந்த வார ம் அறிவித்தது. சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு ம் கட்டுப்பாடு கொண்டு வர ப்பட்டுள்ளது. இந் நிலை யில் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவீத நேரடி அன் னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து ள்ளது.
மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு நாடு எங்கும் மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், இடது சாரி கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திரு ந்தன.
இந்த போராட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கூட் டணியில் உள்ள சில கட்சி களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இன்று நாடெங்கும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. தமிழ்நாட்டிலு ம் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்க ளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரி வித்துள்ளதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நக ரின் முக்கிய வணிக பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப் பட்டன. ஒருசில டீக்கடைகள், சிறு சிறு பெட்டிக் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. மிகப்பெரிய வணிக வளாகமா ன கோயம்பேடு மார்க்கெட் இன்று மூடப்பட்டது.
தினமும் அதிகாலையிலேயே வியாபாரம் களைகட்டி காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் இன்று வெறிச்சோடி கிடந்தது. வெளி மாநி லங்களில் இருந்து சரக்குகள் ஏற்றிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் பொருட்கள் இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரிகளின் பக்கத்திலேயே டிரைவர்கள் சமைத்து சாப்பிட்ட னர். நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. நாடு முழுவதும் 65 லட்சம் சரக்கு லாரிகள் வேன்கள் இயங்கவில்லை. இதில் தமிழகத்தில் மட்டும் 5.25 லட்சம் லாரிகள் ஓட வில்லை.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழக லாரி உரிமையாளர்க ளுக்கு சுமார் ரூ.120 கோடி வரை வாடகை இழப்பு ஏற்படக்கூடும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட் டது. சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடியது.
திருச்சி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் அனை த்து தொழில் நிறுவனங்கள், வணிக அமைப்புகள் கலந்து கொண்ட ன. மாநகர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. அனைத்து ஓட்டல்கள், வணிக நிறுவனங்களும் அடைக்கப் பட்டு இருந்தன. நகர் பகுதியில் 2 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடவில் லை.
இதேபோல் புறநகர் பகுதிகளான மணப்பாறை, தொட்டியம், முசிறி, திருவெ றும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 2,460 ஆட்டோக்களும், 2,600 லாரிகளும் இயக்கப்படவில்லை. பெரும்பாலான வீதிகள் வெறிச் சோடி கிடந்தன. தெருக்களில் உள்ள பெரும்பாலான பெட்டிக் கடை களும் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். கரூர் மாவட்டத்தில் வேன், லாரி, ஆட்டோக்கள் ஓடவில்லை.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில டீக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டன. புது க்கோட்டையில் பிருந்தாவனம், புதிய பஸ்நிலையம், மேல ராஜ வீதி , கீழராஜ வீதி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்க ப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள் மற்றும் பள்ளி வேன்கள் மட்டும் இயங்கின.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் முழு அடைப்பு காரண மாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சேலம் சின்னக்கடை வீதி, மற்றும் பட்டைகோவில், ஆனந்தா இறக் கம் பகுதி மற்றும் டவுனில் உள்ள அனைத்து நகை கடைகளும் இன் று மூடப்பட்டு இருந்தது. இதனால் டவுன் பகுதி வெறிச்சோடி காணப் பட்டது.
சேலம் டவுன், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி மற்றும் பல பகுதிகளில் வெள்ளிப்பட்டறைகள்அடைக்கப்பட்டு இருந்தது. லாரி கள் இயங்காததால் சேலம் இரும்பாலையில் இருந்து வெளி மாநி லங்களுக்கு இரும்பு தகடுகள் மற்றும் இரும்பு பொருட்கள் ஏற்றி செல்லவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் கள் இன்று வழக்கம் போல் ஒடின. ஆனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது.
ஆட்டோக்களும், டாக்சிகளும் ஓடின. நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. சேலம் ரோடு, கடை வீதி, பரம த்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மளிகைக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன.
தஞ்சை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஒரு சில கடைகள், மற்றும் டீ கடைகள் மட்டும் திறந்து இருந்தன. கும்ப கோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஓரத்த நாடு, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஈரோடு மாவட்டத்தில் பஸ்கள்-ரெயில்கள் வழக்கம்போல ஓடின. அரசு பஸ்கள்-தனியாÖர் பஸ்கள், மினி பஸ்கள் ஆகியவவை வழக் கம் போல ஓடின. ஆனால் இந்த பஸ் களில் வழக்கத்தை விட கூட் டம் குறைவாகவே இருந்தன. தினசரி காய்கறி மார்க்கெட்டு செயல் படவில்லை. லாரிகள் எதுவும் ஓடவில்லை .ஒரு சில ஆட்டோக்கள் தவிர மற்ற ஆட்டோக்கள் ஒடின.
நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அதுபோல் ஆட்டோக்களும் ஓடுகின்றன. ரெயில்களும் கால தாமதமின்றி வந்தன. ஆனால் லாரிகள் ஓடவில்லை. மார்க்கெட் டுகள் அடைக்கப்பட்டுள்ளன. பஜார்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பஜார் வெறிச்சோடி காணப்ப ட்டது. பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறிய ஓட்டல்கள் திறந்திருந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டு இருந்தன. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்ச ல், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளும், ஓட்டல்களும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் வழக்கம் போ ல் ஓடின. பள்ளிகள் அனைத்தும் திறந்து இருந்தன. லாரிகள் முழு மையாக ஓடவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் ஓடின.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின. டீக் கடைகள், ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் ஆகி யவை திறந்திருந்தன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கவில்லை. வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
கிருஷ்ணகிரியில் இன்று வழக்கம் போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுÖரி வாகனங்கள் இயங்கின. கிருஷ்ணகிரி பஸ் நிலையம், பஸ் டெப்போ, ரவுண்டானா, பெங்களுர் சாலை, டீக் கடைகள். பெட்டிக்கடைகள். மருந்துக்கடைகள், பழக்கடைகள் உள் ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. லாரிகள் ஓடாததால் கிருஷ்ணகிரி பைபாஸ்சாலை மற்றும் சென்னை பைபர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை வெறிச்சொடி காண ப்பட்டது. கிருஷ்ணகிரி நகரில் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடின. புற நகர் பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடவில்லை.
வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்த ம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. வேலூர் நேதாஜி மார் க்கெட்டும் மூடப்பட்டது.லாரிகள் இயக்கப்படவில்லை. பெரும்பா லான ஆட்டோக்கள் ஓடியது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் வழக் கம் போல் இயங்கியது.
ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப் பேட்டையில் உள்ள தோல் தொழிற் சாலைகள் 50 சதவீதம் இயங்கவில்லை. வேலூரில் உள்ள ஓட்டல் களும் மூடப் பட்டது. திருவண்ணாமலையில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோடக்கள் வழக்கம் போல் ஓடிய து. லாரிகள் ஓடவில்லை. ஆரணியில் பழம், பூ கடைகளை தவிர அனைத்தும் கடைகளும் மூடப்பட்டது.
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பஸ்கள், வேன்கள், ஆட் டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் வழக்கத்தைவிட குறைவாக இயங்கின. இந்த 2 மாவட்டங்களிலும் கடைகள், ஓட்டல்கள், காய் கறி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து குறை ந்து சாலைகள் வெறிச்சோடின.
மதுரையில் வழக்கம்போல் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. கீழ வெளிவீதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சென்ட்ரல் மார்க்கெட் பூ மார்க்கெட்டுகளில் ஒரு சில கடைகள் தவிர பல கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மதுரை நகரில் லாரிகள் ஓடவில்லை. விருதுநகரில் வழக்கம் போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடியது. விருதுநகரில் மெயின் பஜார், தெப்பம் பஜார் பழை ய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. 50 சதவீத லாரி, ஆட்டோ, வேன்கள் ஓடி யது.
தேனி மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மற்றும் ஓட்டல்கள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்கள் வேன்கள் ஓடியது. ஓட்டன் சத்திரம் மார்க்கெட் மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.
திண்டுக்கல்லில் கீழரத வீதி, மேற்கு ரதவீதி, மெயின் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. காய்கறி மார்க்கெட், வெங்காய மண்டி மூடப்பட்டு இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. ஆட்டோக்கள், லாரிகள் இயங்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை உள்பட மாலட்டம் முழு வதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. அரசு மற் றும் தனியார் பஸ்களில் வழக்கம்போல ஓடியது. லாரிகள், ஆட்டோ க்கள், வேன்கள் ஓடியது. – malaimalar
இந்த ஒரு முழுஅடைப்பு போராட்திலுருந்தே தெரிகிறது..நம் தமிழ்நாட்டின் ஒற்றுமை..பாதி ஆதரவு…மீதி அவவங்க வேலை…இப்படி இருந்தால் எப்படி இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்…
நன்றி,
மலர்