கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டு பிடிக்க ப்பட்டுள்ளது. அந்நாட்டில் ‘லெசூலா’ என அழைக்கப்படும் இக்குரங் கினத்தின் விஞ்ஞான ரீதி யான பெயர் ‘சேர்கோபிதக ஸ் லொமாமியன்சிஸ்’ (cer-copithecus lomamiensis) என்பதாகும்.
இதனைத்தொடர்ந்து கொ ங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரப ணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கி னமானது, விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை உறுதிசெய்துள் ளனர்
கொங்கோவின் மையப்பகுதியில் உள்ள மழைக்காடுகளில் இக் குரங்கினமானது அதிகமாக வாழ் வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவி க்கின்றனர். இக்குரங்குகள் இறைச் சிக்காக வேட்டையாடப் படுவதாக வும் இதனால் இவ்வினம் வேகமாக அழியக்கூடிய சாத்தியங்கள் நிலவு வதாகவும் விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.
‘லெசூலா’ குரங்குகளானவை ‘சேர்கோபிதகஸ் ஹம்லைனி’ (Cercopithecus hamlyni) என்ற ழைக்கப்படும் ஆந்தை முகக் குரங்குகளின் முகத்தோற்றத்தினை ஒத்ததாகக்காணப்படுகின்ற போதிலும் இவை அவற்றிலிருந்து வே றுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கி ன்றனர்.
ஆபிரிக்காவில் கடந்த 28 ஆண்டுகளில்கண்டுபிடிக்கப்பட்ட 2ஆவது புதிய குரங்கினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. – Anand Raja (fb)