Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண் எழுதிய பெண்களுக்கான காமசூத்ரா

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் கே.ஆர். இந்திராஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப் பட்டுள்ள இந்நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்க ளை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காம சூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையை யும் தன் பக்கம் ஈர்த்துள் ளார்.

க‌டந்த ஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வந்துள்ள‍து. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்க ளின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதி யுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதில் பல விஷயங்கள் இருக்கும். செயல்முறை விளக்கங்களையும், செக்ஸில் வெல்வதற்கான ஆலோ சனைகளையும் கூட இதில் கொடு த்துள்ளேன். இது பலரது புருவங்க ளை உயர்த்தச் செய்யலாம், கோப ப்படலாம், கொந்தளிக்கலாம், எதி ர்ப்புகள் கிளம்பலாம். ஆனால் இந் த நூல் பெண்களுக்கானது, அவர் களுக்காகவே இதை எழுதியுள்ளேன். அவர்களின் செக்ஸ் சுதந்திரத் தை வலியுறுத்தி இதை எழுதியுள்ளேன். எனவே எதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.

வாத்சாயனரின் காமசூத்ரா நூலை நான் படிக்க ஆரம்பித்தபோது, அது முழுக்க முழுக்க ஒரு ஆணால், ஆண்களுக்காகவே எழுதப்ப ட்டதாகவே எனக்குத் தோன்றியது. ஆணி ன் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வு கள்தான் அதில் மேலோங்கி இருந்தன. ஒரு ஆண் தனது இச்சையை எப்படித் தணிப்பது என்பதற்கான வழிகாட்டியாக வே இது தெரிந்தது. ஆணாதிக்கம் நிறை ந்த நூலாகவே அது எனக்குத்தென்பட்ட து. எனவேதான் பெண்களுக்கான காம சூத்ராவை எழுத நான் தீர்மானித்தேன்.

இதற்காக ஒரு ஆய்வையே நடத்தினேன். 50 கேள்விகள் அடங்கிய ஒரு வினாத்தா ளை, பெண்களிடம் கொடுத்து அவர்களி ன் கருத்துக்களை அறிந்தேன். ஒவ்வொ ரு பெண்ணும் பத்து பேரிடம் கருத்துக் கேட்டுத் தெரிவிக்குமா றும் கோரியிருந்தேன். செக்ஸ் அனுபவம் குறித்த கேள்விகள் அவை . அவர்கள் தங்களது முழுமையான பெயர், முகவரிகளைக் கொடுக் கவில்லை. 20 சதவீதம் பேர்தான் பதிலளித்திருந்தனர்.

பெரும்பாலான மலையாளப் பெண்களுக்கு செக்ஸ் விழிப் புணர்வு இருந்தாலும் கூட அவர் கள் வெளிப்படையாக அதைச் சொ ல்ல முன்வரவில்லை. இருப்பினு ம் அவர்களுடன் தனிப்பட்ட முறை யில் பேசியபோது நிறைய தகவல் களை என்னால் சேகரிக்க முடிந்தது. அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதினேன் என்றார்.

இந்திரா மேலும் கூறுகையில், நான் சந்தி த்த மலையாளப் பெண்களிடம் பேசியதில் எனக்குத் தெரிய வந்த ஒரு உண்மை என் னவென்றால் பெரும்பாலான பெண்கள் செக்ஸ் உறவின்போது பொய்யான உச்சத் தையே (Orgasam) வெளிப்படுத்துகிறார்க ளாம். தங்களது கணவர் அல்லது காதல ரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு அவர்கள் செய்வதாக தெரி வித்தனர் என்றார் இந்திரா.

நன்றி – டமில்சூத்ரா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: