தில்லானா மோகனாம்பாள் என்ற திரைக்காவியத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, ஏ.எம். ராஜா, பாலையா, சி.கே.சரஸ்வதி, நாகேஷ், பாலாஜி, எம்.என். நம்பியார், தங்கவேலு, ராமச் சந்திரன், சித்தூர் நாகையா மற்றும் பலரது நடிப்பில் வெ ளிவந்து பெரு வெற்றி பெற் றது.
இத்திரைப்படத்தில் ஒரு காட்சி,
நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கல் சண்முகம் (சிவாஜி கணேசன்) அவர் களை ஒரு நாகரீக விழா ஒன்றில் வாசிக்க அழைத்து வருவார் வைத்தி (அதாங்க நம்ம நாகேஷ்) ஆனால் சிக்கல் சண்முகமோ அங்கு அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நடத்தப் படும் விதத்தாலும் உரிய மரி யாதை தரப்படாததாலும், வெறுப்புற்று, கோபமுட னே வைத்தியிடம் தான் வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொ டுத்து தனது குழுவினருடன் வெறியேறுவார்.
அப்படி வெளியேறும்போது, அந்த மாளிகை வாசலில் அவரது இசை யை கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து காத்திருப்பதை அறிந்து, அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி அந்த வாசலிலேயே ஆயிரம் கண் போதாதோ . . . என்ற பாடலை வாச்சித்து காட்டுவார். மேலும் இவரது வாசிப்பால் கவரப்பட்ட அந்த மேலை நாட்டவர்களு ம் மெய் மறந்து மாளிகையை விட்டே வெளியே வந்து இந்த நாதஸ் வர இசையை ரசிப்பர். மேலை நாட்டு இசையை நமது வாத்தியக் கருவிகளில் வாசிக்கச் சொல்லி வேண்டுகோளும் வைப்பர்.
அந்த வேண்டுகோளை ஏற்று க்கொண்ட சிக்கல் சண்முகம் அவரது குழுவினரும் மேற்க த்திய இசையை நமது நாட்டு பாரம்பரிய இசைக் கருவிக ளான நாதஸ்வரம் மற்றும் தவிலில் வாசிக்க முடியும் என்பதை நிரூபித்து க்காட்டி, அதை மேலை நாட்டவரும் ரசிக்கும் வண்ணம் இசைய மைத்த மறைந்த கே.வி. மகாதேவன் ஐயா அவர்களை இத்தருணத் தில் நினைத்துப்பார்ப்போம்.