Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (23/09): "ஊரோடு ஒத்து வாழ். முரண்பட்டு, மனநோயாளியாய் காட்சியளிக்காதே!"

 
 

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது 55, கணவர் வயது 65, எங்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகின்றன. பேரன் வயது 13, பேத்தி வயது10. எங்கள் மகளின் வாழ்க்கை நல்ல படியாக அமைந்து விட்டது. மகன் பி.இ., முடித்து நல்ல வேலையில், வெளிநாட் டில் இருக்கிறான். எல். கே.ஜி. முதல் பி.இ., வரை, பள்ளியில் முதல் மாணவ ன். நாங்கள், அவனை மிகவும் கஷ்டப்பட்டு படிக் க வைத்தோம். எந்த வகையிலும், அவனை குறை சொல்ல முடியாது. 2004ல், வெளிநாடு சென் றான்.

இந்த நிமிடம் வரை, எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. 2007ல், எங்களை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்றான். சில மாதம் அங்கு தங்கியிருந்து, பின், ஊர் திரும்பினோம். திருமணம் பற்றி பேசினோ ம். அப்போதுதான், ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி னான். நாங்கள் வெளிநாட்டு பெண் வேண்டாம் என மறுத்து, பல பிரச்னைகளுக்கு பின் ஒத்துக்கொண்டோம். 2006ல், பழக்கம் ஏற்ப ட்டதாம். 2010ல், அந்த பெண், வேலை மாற்றலாகி வேறுநாடு சென் று விட்டாள்.

முதலிலேயே இவன் ஒரு நாடு, அவள் ஒரு நாடு. அந்த பெண் ஆபீஸ் வேலையாக, இங்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. “இப்ப என க்கு வேலை அதிகமாக உள்ளது. உன்னை திருமணம் செய்ய முடியா து இருவரும் ஒன்று சேர முடியாது…’ என்றும் சொல்லி விட்டாள். இது நடந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அவள் பணக்கார பெண், நாங்கள் நடுத்தரக் குடும்பம். “நீ உனக்கு பிடித்த பெண்ணை, திரு மணம் முடித்துக் கொள்…’ என்று சொல்லி விட்டாள். என் மகனோ, இனி திருமணமே வேண்டாம் என்கிறான்.

அவனுக்கு இப்போது வயது 34. என்னுடைய கணவருக்கும் மூன்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், நாங்கள் இருவரும், எந்த வே லையும் செய்ய முடியாமல் வீட்டில் இருக்கிறோம். திருமணம் என் றாலே சண்டை பிடிக்கிறான். மற்றபடி எங்களை நன்றாக கவனித் துக் கொள்கிறான். எல்லா வசதியுடன் கூடிய வீடு கட்டி கொடுத்து, வேலைகளுக்கு ஆள் வைத்தும், இன்னும் மருத்துவ செலவுகளும் செய்து வருகிறான். இவன் திருமணத்தைத் தவிர, எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

என் பெற்றோருக்கு, நாங்கள் மூன்று பெண்கள். என் தந்தைக்கு உட ல்நிலை சரிஇல்லாததால், என் தாய், எங்களை அழைத்துக் கொண் டு, என் தாத்தா வீட்டுக்கு வந்து விட்டாள். நாங்கள் படித்து, வளர்ந் தது எல்லாம் அங்குதான். குடும்ப ஏழ்மை ஒரு புறம், மற்றவர்களின் ஏளனப்பார்வை ஒருபுறம் என்று, எங்கள் இளமைகாலம் முழுவதும் துக்கம்தான். அதன் பின், எங்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து, தனித்தனியாக சென்று விட்டோம்.

என் தாய், உடல் நிலை பாதிக்கப்பட்டு, கடைசி இருபது வருடங்கள் என்னுடன் தான் இருந்து, இறந்து போனார். உற்றார், உறவினர் உதவி எதுவும் இல்லாமல் தான், என் மகனை படிக்க வைத்து, இந்த நிலை க்கு கொண்டு சென்றோம். இதெல்லாவற்றையும், சிறுவயது முத லே பார்த்து வளர்ந்ததால், என் மகன், “திருமணம் வேண்டாம், இரு க்கும் வரை சந்தோஷமாக இருப்போம்…’ என்கிறான்.

வயதான காலத்தில் துணைக்கு ஆள் வேண்டும், என்று எங்களை உதாரண மாக சொன்னேன். “எனக்கு முன் அவள் இறந்து விட்டால், என்ன செய்வது?’ என்கிறான். எதிலுமே அவனுக்கு ஆசையோ, விரு ப்பமோ இல்லை. அமைதியான பையன், வேலையில் கெட்டிக்கார ன். “எனக்கு உலகமே பிடிக்கலை; உங்கள் மறைவுக்கு பின், நானும் இறந்து விடுவேன்…’ என்கிறான்.

கடந்த 2010ல், அக்டோபர் மாதம் மனநல மருத்துவரிடம் காட்டினோ ம். அவர், சிறுவயது முதல் பட்ட கஷ்டங்கள், வீட்டு சூழ்நிலை, படித்த சூழ்நிலை, இது மிகவும் ஆழ்மனதில் பதிந்து விட்டது. முடிந்தவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தி அனுப்பினார். எதை பேசினாலும் தத்துவம் பேசுகிறான். எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அம்மா என்றால் உயிரையே விடுவான். நண்பனைப் போல், என்னிடம் பேசுவான். நான், திருமணம் பற்றி பேசினால், என் மனம் நோகும்படி சண்டை பிடிக்கிறான்.

இந்த வயதான காலத்தில், அவனைப் பிரிந்து இருக்க முடியவில் லை, இந்தியா வந்துவிடு, எங்களை யார் பார்ப்பது என்றால், “நீங் கள் இங்கு வாருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்…’ என்கிறான். எங்களுக்கு மொழி தெரியாமல், அங்கு எப்படி காலம் கழிப்பது. நாங் கள் உடல்நிலை சரியில்லாதவர்கள், செலவு அதிகமாகும் என்று கவலைப்படுகிறோம். அவனுக்கு திருமணம் நடக்க, தினமும் இறை வனை வேண்டுகிறேன். திருமண பேச்சு எடுப்பதால், இப்போது என் னிடம் சரியாக பேசுவதில்லை. இப்படியே ஏழு ஆண்டுகள் கழித்து விட்டான்.

எங்களுக்கு வயதாவதால், அவனுக்கு திருமணம் முடிக்காமலே இறந்து விடுவோமோ என்ற கவலையால், என்னால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. இப்போ சொல்கிறான்… “உங்களுக்கு ஒரு தொகை வங்கியில் போட்டு விட்டு, (வட்டி வாங்கி செலவிற்கு) நான் சம்பாதித்து, எனக்கும் செலவிற்கு வைத்துக் கொண்டு, மீதி பணத்தில் உலக நாடுகளை சுற்றிப் பார்க்கணும். வயதான காலத் திற்கு வழிவகுத்து வைத்துள்ளேன்…’ என்கிறான்.

அப்படியே திருமணம் செய்தாலும், குழந்தை வேண்டாம். அவளின் வருமானத்தில் அவள் செலவு செய்யணும்; உறவினர் வரக் கூடாது என்கிறான். யார் சகோதரி, பெண் கொடுப்பர்! இந்தியா வர மாட்டே ன் என்கிறான். அவனை பிரிந்து இருக்க முடியவில்லை. நாங்கள் என்ன செய்வது. உயிரை மாய்த்துக்கலாம்ன்னு உள்ளோம். இப்போ து எங்கள் மகள், மாப்பிள்ளை பாதுகாப்பில், தனியாக எங்கள் வீட்டில் உள்ளோம். நாங்கள் என்ன செய்வது? எப்படி முடிவெடுப்பது என்று ஒரு நல்ல யோசனை கூறவும்.

— இப்படிக்கு தங்கள் அன்பு சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு —

உங்கள் மகனின் பிரம்மச்சரிய விரதத்திற்கு, கீழ்க்கண்டவற்றில் ஒன்று காரணமாயிருக்கலாம்.

* குடும்பச் சூழல், அவனை எப்போதுமே வாழ்க்கையின் இருண்ட பக் கத்தையே பார்க்கும் மனிதனாக்கி விட்டது. திருமண பந்தங்களை வெறுத்து ஒதுக்கும் தத்துவார்த்த புத்தகங்களை, தேடி தேடி வாசிக் கும் புத்தகப் புழுவாய் இருந்திருக்கிறான் உங்கள் மகன்.

* திருமண பந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல், சுதந்திரனாய், நா டோடியாய் வாழும் ஆசையை, வெளிநாட்டு கலாசாரம், உங்கள் மக னுக்குள் உருவாக்கி விட்டதோ, என்னவோ?

* காதல் தோல்வி, திருமணங்கள் மீதான நம்பிக்கையை தகர்த்திரு க்கலாம்.

* ஒருவேளை, உங்கள் மகனுக்கு, ஆண்மைக் குறைவோ, தீரா நோய்த்தொற்றோ இருந்தாலும் இருக்கலாம்.

* திருமணம் செய்து கொள்ளாமலேயே, உங்கள் மகன், பணிபுரியும் வெளிநாட்டில், “ப்ரீ செக்ஸ்’ அபரிமிதமாய் அனுபவிக்கிறானோ, என்னவோ?

* அம்மா பிள்ளையான உங்கள் மகன், உங்களைப் போல் மனைவி தேடி தேடி, களைத்துப் போயிருக்கக் கூடும்.

* பொதுவாக ஆண்களுக்கு திருமண ஆசை, 23 – 29 வயதுகளில் மே லோங்கி நிற்கும். 30 வயதிற்கு மேல், வயது ஒவ்வொன்றாய் கூட, திருமண ஆர்வம் குறைந்து கொண்டே போகும். அப்படிப்பட்ட ஆர்வ க்குறைவுதான், உங்கள் மகனுக்கும்.

* திருமணத்திற்கு பின் வரும் புதிய உறவுச் சுமைகளை சுமக்க, உங்கள் மகன் தயாரில்லை. பண விஷயத்திலும், உங்கள் மகன் ஒரு கறார் பார்ட்டி.

* பெற்றோர் கட்டி வைக்கும் பெண்ணை மணந்து கொண்டால், அப்பெண், சுகவீனமான பெற்றோரை புறக்கணிக்க செய்து விடுவா ள் என்ற பயம் கூட இருக்கலாம்.

* அளவுக்கதிகமான பணி, ஒழுங்கில்லாத உணவு பழக்க வழக்கம், தாறுமாறான குடிப் பழக்கம், அமெரிக்க வாழ் இந்திய முதிர் இளை ஞர்களின் இந்தியத் திருமணம் பற்றிய ஹிப்போகிரைசி முதலி யவை ஏற்படுத்தும் மன அழுத்தம், உங்கள் மகனை சிறிது சிறிதாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது என நம்புகிறேன்.

மீதி பதில், நேரடியாக உங்கள் மகனுக்கு –

மகனே… இந்து தர்மம், ஒரு ஆண் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று வளர்த்து, அவரவருக்கு ஒரு எதிர்காலம் அமைத்துக் கொடு த்த பின், சந்நியாசம் மேற்கொள்ளலாம் என்கிறது. இஸ்லாமோ, துறவறமே தேவையில்லாத ஒன்று என்கிறது.

உன் அக்காவின், சிறப்பான திருமண வாழ்க்கையைப் பார். அன்பான கணவன்; அறிவான மகன்; பண்பான மகள். இப்படிப்பட்ட வாழ்க்கை உனக்கும் வேண்டாமா? காதல் தோல்வி இல்லாத ஆண், பெண் உல கில் யார் இருக்கின்றனர்? காதலில் தோற்ற உனக்கு, ஒரு சிறப்பான மனைவியை நஷ்ட ஈடாய் இறைவன் கொடுக்கலாம் இல்லையா?

திருமண உறவில் லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. வருபவள் பெற்றோரை கவனிக்காமல் இருக்க செய்து விடுவாள் என்ற வீண் பயமும் தேவையில்லை உனக்கு.

ஆண், பெண் படைக்கப்பட்டதின் உன்னத நோக்கமே, அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, அடுத்த தலைமுறையை உருவாக்கித் தர வேண்டும் என்பதே. உன் மூலமும், உன் சந்ததி தொடர வேண்டாமா?
பிரம்மச்சாரியாய் உலகம் சுற்றிப் பார்ப்பதை விட, சம்சாரியாய் சுற்றிப் பார்ப்பது பரம சுகம். திருமணத்திற்கு பின் கிடைக்கும் மனை வி வழி உறவினர்கள், உனக்கு கிடைக்கும் சிறப்புப் பரிசு.

பெற்றோருக்கு வீடு கட்டித் தருதல், வைத்திய செலவை செய்தல் போன்றவை, அவர்களுக்கு முழு திருப்தியைத் தராது. நீ திருமணம் செய்து கொள்ளாமலிருப்பது, உன் பெற்றோருக்கு தினம் தினம், மரண அவஸ்தையை, பரிசளிக்கிறது என்பதை அறிவாயா?

என்ன தான் லட்ச லட்சமாய் வெளிநாட்டில் சம்பாதித்தாலும், உன் வேர், இந்தியாவில் தான் இருக்கிறது என்பதை உணர். உன் பெற் றோரின் ஆயுளுக்குப் பின், உன் அக்கா குடும்பம், உன்னை விட்டு, நிரந்தரமாய் விலகி விடும். உனக்கும், 40 வயதாகி விடும். உன் வாழ் க்கையில் வெறுமையும், சூன்யமும் பூத்து விடும். பின், மீதி வாழ்நா ள் நரகமாகி விடும்.

முழு விருப்பம் இல்லாவிட்டாலும், திருமணம்செய்துகொண்டு, உன் பெற்றோருக்கு நூற்றாண்டு கால சந்தோஷத்தை பரிசளி. ஊரோடு ஒத்து வாழ். முரண்பட்டு, மனநோயாளியாய் காட்சியளிக்காதே.

வெகு சீக்கிரம் நடக்க இருக்கும் உன் திருமணத்திற்கு, என் நெஞ் சார்ந்த வாழ்த்துகள்!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: