ஷேக்ஸ்பியர் எழுதிய ஓத்தல்லோ என்கிற காவியத்தில் உள்ள ஒரு இறுதிக் காட்சியை இரத்த திலகம் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகை யர் திலகம் சாவித்திரியும் நடித்திருப் பார்கள்.
இதில் ஓத்தல்லோ வாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அவரது காதலி டெஸ்டிமோனாவா க நடிகையர் திலகம் சாவித்திரியும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பர். இவர்கள் இதழ்களில் இருந்து உதிரும் ஆங்கில வார்த்தையின் உச்ச ரிப்பைக் கண்டு ஆங்கிலேயர்களே வியந்து பாராட்டிய வரலாறு பல உண்டு.
நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் ஆகிய இருவரது நடிப்பை பாராட்ட நமக்கு எத்தனை பிறவிகள் நமக்கு கிடைத்தாலும அத்த னை பிறவிகளிலும் பாராட்டிக்கொண்டே இருக்கலாம. அந்தளவு அற்புதமான நடிப்பும் ஆங்கில உச்சரிப்பும் ஆகும்.
இதில் பெரிதும் பாராட்டப்பட வேண் டிய விஷயம் என்னவென்றால்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு துளியும் ஆங்கிலம் பேசவோ எழுதவோ தெரியாது. தனக்கு ஆங்கிலம் தெரியா விட்டா லும், அந்த ஆங்கில வார்த்தைகளி ன் வீரியமும் உணர்ச்சிகளும் குறை யாத அளவுக்கு தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதை அப்படியே ஆங்கில வசனத்தில் மிகவும் தனது மேன்மையான நடிப்பையும் கலந்து நமது கண்களுக்கும் செவிகளு க்கும் விருந்தளிப்பார். இதோ இரத்த திலகம் இடம்பெற்ற அந்த அற்புதக் காட்சி அடங்கிய வீடியோவை பாருங்கள்.
கருத்து – விதை2விருட்சம்
கருத்து – விதை2விருட்சம்