Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாதி பெயரை நீக்க மறுத்த நடிகை!

 

தமிழ் படங்களில் நடிக்கும் தெலுங்கு, மலையாள நடிகைகள் தங்க ள் பெயர்களுடன் சாதிப் பெயர் களை இணைத்துள்ளனர்.

சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், நவ்யா நாயர், மேகா நாயர், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ஸ்வாதி வர்மா என பலர் சாதி பெயர்க ளை சேர்த்து வைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இயக் குனர்கள் பாலா, சேரன் போன்றோர் நடிகைகள் சாதி பெயர்களை வைக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர்.

இதனை பல நடிகைகள் ஏற்கவில்லை. இதுகுறுத்து சமீரா ரெட்டி, எனது குடும்ப பெயரைத்தான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சாதி பெயரை நீக்க மறுத்து விட்டார். ஜனனி ஐயரும் சாதி பெயரை நீக்க மறுத்துள்ளார்.

இது குறித்து அவர், ‘’நடிகைகள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயர்களை வைப்பது தவறல்ல. நான் ஐயர் பெயரை நீக்க மாட்டேன்’’என்று கூறியுள்ளார்.

 

10 Comments

 • \\”இது குறித்து அவர், ‘’நடிகைகள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயர்களை வைப்பது தவறல்ல. நான் ஐயர் பெயரை நீக்க மாட்டேன்’’என்று கூறியுள்ளார்.”//
  சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி கூறியது நினைவுக்கு வரவில்லையா…..பகிர்வுக்கு நன்றி….
  நன்றி,
  பிரியா

 • Reservation illaiyadi pappa endra nilai varum pozhuduthan saadhigal illaiyadi paapa engindra Bharathiyin kootru unmaiyagath thodangum.
  saathiyil arasiyal nadakkalam.Mantri padhavigal ,promotion ellam saathiyinaal than aagum engum pozhudhu nadigaigal saathi peyariai neeka maruththal enna kudi muzhugip pogindradhu?

 • காயத்ரி

  சாதிகளையும் அதனால் விளைந்த கொடுமைகளையும் கண்ட பாரதி பாடிய பாடல், சாதிகளே இல்லாமலிருந்தால், பாரதியார் இந்த சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை பாடியிருக்க‍ வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
  சாதிகளே இல்லாமலிருந்தால், இட ஒதுக்கீடு என்ற வார்த்தையே தோன்றியிருக்காது.
  நீ மேல் சாதி அவன் கீழ் சாதி என்று சாதியின் பெயரைச்சொல்லி எத்த‍னை நாள்தான் ஏமாற்றுவார்களோ தெரிய வில்லை.

 • Caste is a serious social formation all over India existing for the past thousands of years which was formally recognised and differently empowered from the time of Maurya Kings.Caste can not be wished away or annihilated by cross marriages or religious conversion or unfair reservation to the extent of 69% or even 100%.Reservation is only changing the caste power and not the caste system.In fact it is only reinforcing the caste system very negatively and unfairly in a democratic setup.
  Excellent free education to all the citizens of India with free food,transport,health and finance to the needy ones irrespective of caste over a long period of time will help balance in the society.Kamaraj is the only leader in India who did good work to achieve this.The foolish and ungrateful Tamils threw him out of power selecting casteeist forces instead.
  Reservation is creating new victims of casteeism and is making India inefficient and corrupt.
  Every one has a right to keep or omit their caste name/surname/family name/village name/house name with their names.
  DMK/DK fellows still abuse Bharathiyar for his caste.
  Casteeism cannot be solved by unfair discrimination or even 100% reservation.Reservation is also cheating in the name of caste only.
  Aspirations for fair society is welcome.But this cannot be achieved by patent unfairness or through rank caste animosity.

 • அவன் கீழ் சாதி(only he will get college admission/scholarship/appointment/promotion irrespective of performance or merit) நீ மேல் சாதி(Even if you get 99% marks you will not get college admission/scholarship/appointment/promotion) என்று சாதியின் பெயரைச்சொல்லி(idhu dhaan samooha needhi endru solli) எத்த‍னை நாள்தான் ஏமாற்றுவார்களோ தெரிய வில்லை.

 • ரா. இராமானுஜம்

  ஒரு குறிப்பிட்ட‍ சமூகத்தினர் தங்களை உயர் சாதி என்று கூறிக்கொண்டு, பிற சமூகத்தினரை, கீழ் சாதி என்று கூறியே மட்ட‍ம் தட்டி, அவர்கள் வாழ்வில் எந்த விதமான முன்னேற்ற‍த்தையும் காணாது ஏதோ ஜந்துவை கண்டு விலகுவது அல்ல‍து விலக்குவது போலல்லவவா நடந்து கொண்டனர்.
  உதாரணமாக
  கோவிலை எடுத்துக்கொள்ளுங்கள்.
  கருவறையில் ஒரு சமூகம்
  நடை வாசலில் ஒரு சமூகம்
  கோவிலுக்கு வெளியே ஒரு சமூகம்
  கருவறையில் இருக்கும் சமூகம் தான் உயர்சாதியாம்!
  நடைவாசலில் இருக்கும் சமூகம் நடுச்சாதியாம்!
  கோவிலுக்கு வெளியே இருக்கும் சமூகம் கீழ் சாதியாம்!
  தீண்டாமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டுத்தான்! இன்னும் எத்த‍னை எத்த‍னை கொடுமைகள் சாதியின் பெயரை சொல்லி அறங்கேறியிருந்தது என்பதை அக்கால வரலாற்றை பிரித்துப் பார்த்தால் தெரியும்.
  ஆன்றோர்களும் சான்றோர்கள் எடுத்த‍ பெரு முயற்சியால் இன்றைய காலக்கட்ட‍தில் ஓரளவு கட்டுப்படுத்த‍ப் பட்டுள்ள‍து. இன்னும் ஆங்காங்கே இத்தகை விரும்பத்தகாத அருவருக்க‍த்தக்க‍ நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
  ***அன்று, உயர் சாதி என்று கூறிக்கொள்ளும் அந்த சமூகத்தினர், மற்ற‍ சமூகத்தினரை ஒதுக்கி வைத்த‍னர்.
  ஆனால், இன்று மற்ற‍ சமூகத்தினரால், அந்த உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் சமூகத்தினர் ஒதுக்க‍ப்பட்டுள்ள‍னர். ***
  சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்!
  வினை விதைத்தவன் வினை அறுப்பான்
  தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று . . .
  மனிதனுக்கு, பெயர் வைப்பதே அவனை இன்னொரு மனிதன் பெயர் சொல்லி அழைத்து நட்பு பாராட்ட‍வும், உறவாட மட்டுமே!
  பெயருக்கு பின்னால் அல்ல‍ எந்த ஒரு இடத்திலும் சாதியின் பெயரை குறிப்பிடவே கூடாது என்பது எனது அழுத்த‍மான கருத்து!
  – ரா. இராமானுஜம்

  • ***அன்று, உயர் சாதி என்று கூறிக்கொள்ளும் அந்த சமூகத்தினர், மற்ற‍ சமூகத்தினரை ஒதுக்கி வைத்த‍னர். ஆனால், இன்று மற்ற‍ சமூகத்தினரால், அந்த உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் சமூகத்தினர் ஒதுக்க‍ப்பட்டுள்ள‍னர். ***
   This is the essence of casteeist fanaticism displayed to justify exceedingly high levels of reservation on caste basis(excluding economic criteria here also-since only the rich can bribe and support corruption) in educational institutions,for enrollment as well as award of scholarships,jobs,promotions etc.Democracy with vote for every adult has enforced these casteeist fanatic forces who take the support of conversion oriented religious vote banks also to help each other.The net effect is rank casteeism,inefficiency and massive corruption at all levels of government administration and the strengthening of anti-national forces directed by religious command centres outside India.Even today the powerful OBCs owning land who are in police force and everywhere because of “mandal effect” continue to suppress the SC/STs. The Indian public irrespective of caste continue to suffer because of this.
   This casteeist Fanaticism has not affected the castes without reservation much .They are well employed all over the world and are much better off.By refusing to recognise the intelligent and meritorious the Indian society is suffering .Many of the social problems of post independent democratic India can be traced to the direct and indirect results of the destructive work done by the “reservation oriented beneficiaries of excessive reservation”.
   If any person does not wish to note his caste any where that is his liberty to do so.But the same person is not at liberty to dictate what others should do.

 • சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்!
  வினை விதைத்தவன் வினை அறுப்பான்
  தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று . . .
  We agree with these words of wisdom totally.Through excessive caste based reservation at all levels of government recruitment and promotions and in educational institutions “vinay” has been plated in plenty for the past 50 years or so.The general public/citizens of India are now harvesting “vinay” in the forms of inefficiency and corruption in all walks of public life and government service.Ignoring/insulting intelligence and merit only to promote caste based interests will make you suffer more and more only.Even 100% caste based reservation totally ignoring intelligence and merit will only lead to harvest of more and more “vinay” and eventual destruction through attack by foreign forces unleashed by religious command centres outside India which are the supporters and partners of the reservation oriented caste fanatics.

 • Nalliah Thayabharan

  வானம் எனக்கொரு போதி மரம்
  சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
  சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.
  தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.
  இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் , என்று பெயர்கள் பாவனையில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.
  பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.
  இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?
  அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன இளைஞர்களில் பலர் ஐயர்களையும்,செட்டி களையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.
  ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு – ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?
  அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?
  சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.
  தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?
  நல்லையா தயாபரன்

  • Caste is a more serious and more deep rooted social problem all over India.Similar social problems do exist in other parts of the world.I can understand some body’s anger in the unfairness of the caste system in a modern democratic society.But caste cannot be removed by not using the caste names.This can only help to hide.This is like the christians hiding their christian name and using the hindu name only to socialise and to spread anti-hindu propaganda in “secular”forums as “secular”participants.The present political system and the reservation system(even in promotions) has made the caste system very strong in India.The christians are making use of this system to get conversions from Hindus and are trying to spoil the social and cultural identities of India and are trying to get the country divided with the help of foreign aid,foreign”intellectuals” and local”research scholars”.They are fairly successful also in this evil work.
   What is to be done is to reduce/remove the inequalities/injustice/unfairness /exploitation indulged in by various castes against other castes.This can be done only by fair minded social and religious leaders(not the ones who are conversion oriented western agents) and very honest politicians like Mr.Kamaraj.
   Hence fighting against or abusing those who chosse to use their caste/family/village/house names as “sur names” has no meaning .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: