Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் வரலாறு

கூகுள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங் கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத் தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக் கான தலைப்பின் இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்ப த்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கா ன விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலே யே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந் து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொ றிக்கான ஒரு ஆய்வாக முன்னெடு த்தனர். இவர் கள்தாம் சேகரித்த தகவ ல்களின் படி தேடு பொறி யில் தேட ப்படும் விடயம் எந்த இணைய பக்கங்க ளில் உள்ளது என்பதையு ம் அதன் தொடர்புகளையு ம் அலசி ஆராய்ந்து தேடு பதிலாக பட்டியலிடுவதே சிறந்தமுறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனை யில் இருந்த தேடு பொறி தனது தேடும் விட யத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முக மான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொ டுத்ததைவிட, தமது தேடு கருவி யானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடு பதிலா க வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பி க்கை கொண்டவர்களாக இரு ந்தார்கள். இவர்கள் தமது ஆரா ய்ச்சிக்கு புனை பெயராக பாக்ர ப் (“BackRub”) (பின்னால் தடவு அல்லது வரு டு)என்ற பெயரை சூட்டியிருந்த துடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (back links) இணைப்புகளுடன் முக் கிய பங்கு வகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர் கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத ற்கு அக்கால கட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ் (Rank Dex) வேலைத் திட்டத்தில் இற ங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடையம் அடங்கி ய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்தஒரு இணையப் பக் கம் இணைக்கப்படுகின்ற தோ அதுவே தேடப்படும் விடயத்தி ன் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந் த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்கழக பட்டப்படிப்புடன் சம்பந்த மான ஆராச்சி என்பதால் தமது விதிக ளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகுள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்க லைக்கழகத்தின் இணையப் பக்கங்க ளை தேடுவதற்காக google .stanford .edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போ திலும்பின் கூகுள்.கொம் (google .com) என 1997ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டது டன் 1998 செப் டம்பர் 15ம் நாள் கூகுள் தனியார் நிறுவனமாகவும் பதி யப்பட்டது. 1998 செப்டம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகுள் வர்த் தக நோக்குடன் ஆரம்பிக்கப் பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலி டுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதி யில் 1.1 மில்லியன் டொலர்க ளை சேர்த்து கொண்டனர்.

மேலும், இவர்கள் ஆரம்பத்தி ல் மிக தீவிரமாக கூகோல். கொம் (googol.com) என பெ யர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இரு ந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சிய ங்கள் கொண்ட எண்ணை க் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Sili con Valley) பொறியிய லாளர் ஒருவரா ல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த துடன அந்த பெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவி ல்லை. எனவே இவர்கள் தமது நிறுவ னத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்த போது பிறந்ததே “ கூகுள்” என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இரு ந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக் கன் பள்ளத் தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வே று இரு இடங் களில் “கூகுள்” இயங்கிய போதிலு ம் விரைவா ன வருவாய் , வளர்ச்சி காரணமாக பெரிய கட்டி ட தொகுதிக்கு வாடகை  அடிப்ப டையில் 2003 இல் மாற்றலாயிற் று. அன்றிலிருந்து அதே இடத்தி லேயே இரு ப்பதுடன் அக்கட்டிடத் தொகுதி கூகுள் பிளெ க்ஸ் (googol plex) எனவும் பெயர் பெற்றது. பின் பு 2006 இல் 319 மில் லியன் டொல ர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண் டது.

கூகுள்தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக் கும் இணைய பாவனையாளர்க ளுடன் புதிது புதிதாகவும் பலரை யும் கவரத் தொடங்கியது. தேடு பொறியில் தேடப்படும் சொற்க ளுடன் தொடர்பான விளம்பரங் களை 2000ம் ஆண்டில் இருந்து கூகுள் சேர்க்கத் தொடங்கிய தோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலை க்காமலும், இணைப்பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோ ன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமை க்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்தி லும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள் ளது. இந்த தேடு விடையத் தை ஒத்த விளம்பரத்தி னை இணையத் தளங்களி ல் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன் னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் “ஒ வேச்சர் சேர்விசஸ்” (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு “யாகூ சேர்ச் மாக்கெட்டிங்” (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகுளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணைய தள சந்தையில் தோற்றுவிட “கூகுள்” லாப மீட்டுவதுடன் உறுதியாக வெற்றி யீட்டி வருகிற து.

ஆரம்பத்தில் “கூகோல்” (googol) என்ப து அதன் அர்த்தம் கண்டு விரும்பப்பட் ட போதிலும் எழுத்துப்பிழைகளுடனா ன “கூகுள்” என்பது மிக பிரபலம் ஆயி ற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வி னைச் சொல்லாக மாறிவிட்ட இதை ஒக் ஸ்ஃபோர்ட் அகராதி 2006 இல் சேர்த்ததுடன் அதனை ‘கூகுள் தேடு பொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது’ என அர்த் தப்படுத்தியும் உள்ளது. கூகுள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமா னது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

நன்றி -விக்கிபீடியா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: