“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தத டா! கர்ணா . . .” என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார்.
அவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார்.
அத்தகைய புகழ் வாய்ந்த இந்த பாடலை, விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கௌதம் என்கிற சிறுவன் பாடி அனைவரையும் கண் கலங்க வைத்தான் அந்த மெய் சிலுருக்க வைத்த பாடலும், உருகிய நெஞ்சங்களும் இதோ உங்கள் பார்வை க்கு . . .
–
–
–
–
–